- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த நடிகைகிட்ட ரொம்பவும் ஜாக்கிரத்தை இருக்கணும், கொஞ்சம் ஏமாந்தால் அவ்வளவுதான் - வெளிப்படையாக பேசிய நடிகர்...

அந்த நடிகைகிட்ட ரொம்பவும் ஜாக்கிரத்தை இருக்கணும், கொஞ்சம் ஏமாந்தால் அவ்வளவுதான் – வெளிப்படையாக பேசிய நடிகர் ஜெயராம்!

- Advertisement -

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயராம் நடிகை ஊர்வசியுடன் இணைந்து மலையாளத்தில் 26 படங்களில் நடித்துள்ளார். தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெயராம் ஊர்வசி இருவரும் தமிழில் பரிமளா அண்ட் கோ என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி உள்ளார்.

பரிமளா அண்ட் கோ படம் குறித்து சமீபத்தில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ஜெயராம் கூறியதாவது, கடந்த 1988ம் ஆண்டிலிருந்து ஊர்வசியோடு நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். பாண்டிராஜ் இந்த பரிமளா அண்ட் கோ படத்தின் ஸ்கிரிப்ட்டை சொன்னபோது, நான் நடுவில் நிறுத்தி இந்த கேரக்டரில் ஊர்வசி நடித்தால் நன்றாக இருக்கும் என்று என் மனதில் தோன்றியதை அவரிடம் சொன்னேன்.

- Advertisement -

அதற்கு அவர் முன்பே ஊர்வசியிடம் கதை சொல்லிவிட்டதாக சொன்னதால் எனக்கு ஆச்சரியமும் சந்தோஷமும் தாங்க முடியவில்லை. நாங்கள் இரண்டு பேரும் 26 படங்களுக்கு மேல் கதாநாயகன் கதாநாயகியாக நடித்திருக்கிறோம். அவர் நான்கைந்து முறை ஸ்டேட் அவார்டுகள் வாங்கி இருக்கிறார். அவை அனைத்துமே நாங்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் தான்.

நாங்கள் இரண்டு பேரும் இணைந்து நடித்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம். எல்லோரும் எங்களது காமெடி பற்றி நிறைய பேசுவார்கள். சொல்லப் போனால் அழுவது போல கூட நடித்துவிடலாம். மற்றவர்களை சிரிக்க வைக்கும் வகையில் காமெடி செய்வது தான் கஷ்டம். அதற்கு பெர்ஃபாரம் பண்ணியே ஆக வேண்டும்.

- Advertisement -

கதையோடு கூடிய காமெடி பல படங்களில் எங்கள் காம்போவுக்கு வெற்றியை தந்தது. சீரியஸ் படங்களிலும் வெற்றி கிடைத்தது. ஊர்வசியின் திரை அனுபவம் பெரியது. தன்னுடன் நடிக்கும் இளையவர்களையும் நடிப்பில் மிளிரச் செய்து விடுவார். மலையாளத்தில் அவருடன் நடிக்கும் போது நாங்கள் எல்லோரும் எச்சரிக்கையாக இருப்போம்.

அவருடன் நடிக்கும் போது ஒரு சிறிய பயத்துடனே நடிக்க வேண்டியது இருக்கும். நம்மை கண நேரத்தில் நடிப்பில் வீழ்த்திவிட்டு மக்களிடம் பெரிய கைதட்டலை ஊர்வசி வாங்கி விடுவார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஊர்வசியுடன் இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளித்தது என்று நடிகர் ஜெயராம் அப்போது கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்