- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்னும் சில தினங்களில் முன்னணி நடிகைக்கு திருமணம்; அவரை பெண் கேட்ட நடிகர் விஷால் -...

இன்னும் சில தினங்களில் முன்னணி நடிகைக்கு திருமணம்; அவரை பெண் கேட்ட நடிகர் விஷால் – உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்!

- Advertisement -

மலையாளம், தமிழ், தெலுங்கு என பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் இப்போது பேபி ஜான் என்ற இந்தி படத்திலும் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளத்தை காட்டிலும் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் அதிக கவர்ச்சி காட்டி வருகிறார். இது ரசிகர்களை வெகுவாக ஆச்சரியப்படுத்தி உள்ளது.

தமிழில் விஜயுடன் பைரவா, சர்க்கார், தனுஷூடன் தொடரி, சிவகார்த்திகேயனுடன் ரெமோ, ரஜினி முருகன், விக்ரமுடன் சாமி 2 உள்ளிட்ட படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக அண்ணாத்த என்ற படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் அவரது நடிப்பில் ரகுதாதா என்ற படம் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

- Advertisement -

மறைந்த நடிகை சாவித்திரி தேவி கேரக்டரில் நடிகையர் திலகம் என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்று, அவரது சிறந்த நடிகை தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. இந்நிலையில் வருகிற 11ம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷூக்கும், ஆண்டனி என்பவருக்கும் திருமணம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, ஆண்டனி என்பவரை கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாகவும், அவர் நீண்டகாலமாக நண்பராக, காதலாக உள்ள நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் இந்த திருமணம் நடப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் திருப்பதிக்கு குடும்பத்துடன் வந்திருந்த கீர்த்தி சுரேஷ் இதை உறுதிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஷால், கீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய வேண்டி பெண் கேட்ட தகவல் வௌியாகி உள்ளது. இதுகுறித்து சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணன் ஒரு நேர்காணலில் கூறுகையில், இந்த தகவலை கூறியிருக்கிறார். சண்டக்கோழி 2 படத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

நடிகர் விஷாலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு, விஷாலின் பெற்றோர், இயக்குனர் லிங்குசாமி மூலமாக, கீர்த்தியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் ஆண்டனி என்பவரை கீர்த்தி சுரேஷ் பல ஆண்டுகளாக காதலிப்பதால், இதற்கு வாய்ப்பில்லை என்று அவர்கள் மறுத்து நிராகரித்து விட்டனர் என்று நடிகர் சித்ரா லட்சுமணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்