- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர்கள் ஆர்யா விஷால் ரவி மோகன் எல்லாம் இந்த விஷயங்களில் கில்லாடிகளா? - வெளிப்படையாக...

நடிகர்கள் ஆர்யா விஷால் ரவி மோகன் எல்லாம் இந்த விஷயங்களில் கில்லாடிகளா? – வெளிப்படையாக போட்டுக் கொடுத்த நடிகர் ஜீவா!

- Advertisement -

பள்ளி கல்லூரிகளில் ஒன்றாக படிக்கும் மாணவர்களுக்குள் உள்ள நட்பு போலவே சினிமா துறையிலும் நெருங்கிய நட்பு வட்டாரம் இருக்கிறது. சக வயது சார்ந்த சில நடிகர்கள் தங்களுக்குள் வாடா போடா என்ற அளவுக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர்.

அந்த வகையில் நடிகர் ஜீவாவுக்கு தமிழ் சினிமாவில் மிக நெருக்கமான நண்பர்களாக இருப்பவர்கள் சந்தானம் ஆர்யா விஷால் ரவி மோகன் சிலம்பரசன் கார்த்தி போன்றவர்கள்தான். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டால் மாமா மச்சான் என்று கல்லூரி மாணவர்களை போல தான் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கலாய்த்து கொள்வார்கள்.

ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜீத்குமார் போன்றவர்கள் சீனியர் நடிகர்களாக இருப்பதால் அவர்களுடன் நடிக்கும் பெரும்பாலான நடிகர்கள் அவர்களை சார் என்றுதான் சொல்கிறார்கள். அவர்களை பற்றி பேசும்போது கூட சார் என்ற வார்த்தையுடன் அவர்களது பெயர்களை குறிப்பிடுகின்றனர்.

ஆனால் 2ம் தலைமுறை சார்ந்த இந்த 90 கிட்ஸ் நடிகர்கள் பலரும் தங்களுக்குள் வாடா போடா நண்பர்களாக இருப்பதும் திரைத்துறை கடந்த ஒரு தனித்துவமான நட்பாகவே இருக்கிறது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் ஜீவாவிடம், எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்டா என்றால், நீங்கள் யாரை சொல்வீர்கள் என்று கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.

அதற்கு பலமாக சிரித்தபடி பதிலளித்த நடிகர் ஜீவா, எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்டா என்றால் அதற்கு ஆர்யாவை சொல்லலாம். அவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான். 250 நாள் ஷூட்டிங், பாலா சார் டைரக்‌ஷன் என்றால் ஓகே மாமா என்று தயங்காமல் சொல்லிடுவான். சைக்கிளை எடுத்துட்டு உடனே கிளம்பி போயிடுவான்.

அதே மாதிரி எவ்வளவு வேணாலும் பார்ட்டி பண்ணலாம் என்றால் ரவியை சொல்லலாம். அவன் எவ்வளவு என்றாலும் பார்ட்டி பண்ணுவான். அதே மாதிரி விஷால் எவ்வளவு வேணாலும் பார்ட்டி பண்ணுவான். எல்லாரும் ஒண்ணுக்கு மேல ஒண்ணுதான் என்று ஜீவா அவர்களை பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார். பார்ட்டி பண்ணுவது என்றால் சரக்கு அடிப்பது என்பதை நாகரிகமாக புதுமொழியில் சொல்வது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்