- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்துல நேர்மையா இருக்கணும், மத்தவங்க வயித்துல அடிக்க கூடாது - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...

அந்த விஷயத்துல நேர்மையா இருக்கணும், மத்தவங்க வயித்துல அடிக்க கூடாது – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன அட்வைஸ்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கிறார். சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அவர் 74 வயதான நிலையிலும் கொண்டாடப்படுகிறார். எங்கு சென்றாலும் தலைவா தலைவா என ரசிகர்கள் கூட்டம் அவரை பார்த்தாலே ஆர்பரித்து ஆரவாரம் செய்கிறது. இன்றும் அவரது கால்ஷீட்டுக்காக இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தவம் இருக்கின்றனர்.

வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். சென்னை கேரளா என 3 ஷெட்யூல் படப்பிடிப்பு இதுவரை முடிவடைந்துள்ளது. வருகிற 20ம் தேதி முதல் மைசூரில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது. இப்போது சென்னை போயஸ்கார்டன் வீட்டில் ரஜினிகாந்த் ஓய்வில் இருந்து வருகிறார்.

- Advertisement -

பொதுவாகவே ரஜினி நேர்காணல்களில் பேசினாலும் விழா மேடைகளில் பேசினாலும் வாழ்க்கை தத்துவங்களை ஆன்மிக விஷயங்களை கதைகளாக கூறுவது வழக்கம். அவர் பேச்சில் ஆயிரம் விதமான ஆழமான விஷயங்கள் அழுத்தமாக இருக்கும். தனது வாழ்க்கை அனுபவங்களில் இருந்துதான் ரஜினிகாந்த் நல்ல அறிவுரைகளை தனது ரசிகர்களுக்கு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது ரொம்பவும் கஷ்டம். அப்படி அந்த வாய்ப்பு கிடைக்கும் போது நாம அதை சரியாக பயன்படுத்திக்கவில்லை என்றால் நம்மை விட முட்டாள் யாரும் இருக்க மாட்டாங்க. ஒருத்தர் வந்து பேரும் புகழோடு இருக்காங்க என்று சொன்னால் அது திறமையாலோ கடுமையான உழைப்பாலோ மட்டும் கிடையாது.

- Advertisement -

அவருக்கு கிடைச்ச வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தியதால்தான். வாய்ப்பை பயன்படுத்தியதால்தான் அவங்க பெரிய இடத்தில் இருக்காங்க. வாய்ப்பு என்பது சில பேருக்கு தானா வரும். அது ஆண்டவனுடைய அருள். அப்படி வாய்ப்புகள் வரலேன்னா நாமே தேடிப்போய் அந்த வாய்ப்புகளை உண்டாக்கிக்கணும்.

ஆனால் அந்த வாய்ப்புகளை மத்தவங்க வயித்தில் அடிக்காமல் மத்தவங்களோட வாய்ப்பை பறிக்காமல் நாணயமாக நேர்மையாக நாம வாய்ப்பை பயன்படுத்தி சம்பாரிச்சு உழைச்சா என்னிக்குமே நல்லா இருப்போம் என்று அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்