- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி இதுபோன்ற காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறக் கூடாது - தணிக்கை விதிகளில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றங்கள்,...

இனி இதுபோன்ற காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறக் கூடாது – தணிக்கை விதிகளில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றங்கள், இயக்குனர்கள் கடைபிடிப்பார்களா?

- Advertisement -

திரைப்படங்கள் என்பவை மக்களின் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல, மக்களின் மனங்களில் ஏற்படுகிற சமுதாயத்தில் ஏற்படுகிற பழுதுகளை போக்கும் நிகழ்ச்சி என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஏனென்றால் சினிமாவில் வரும் காட்சிகள் மக்களின் மனங்களில் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதால் திரைப்படங்களை நல்ல விதமான கண்ணோட்டத்தில் தான் உருவாக்கி தர வேண்டும். ஆனால் இன்று கமர்ஷியல் என்ற பெயரில் வன்முறை நிறைந்த குப்பை படங்களே நிறைய வெளியாகின்றன.

இந்நிலையில் சென்சார் போர்டு தரப்பில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமா தணிக்கை விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. திரைப்பட தணிக்கை மற்றும் சான்றிதழ் வழங்கும் முறையில் மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முக்கிய விதிமுறைகளை படத்தின் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் நடிகர் நடிகைகள் அதிக கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகிறது.

- Advertisement -

அந்த புதிய விதிகளின்படி, திரைப்படங்களில் வன்முறை மற்றும் குற்ற செயல்களை பெருமைப்படுத்தும் காட்சிகள் உருவாக்க கூடாது. குற்றவியல் செயல்களை செய்யும் முறைகளை துல்லியமாக படம் பிடித்து காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பலாத்காரம் சீண்டல்கள் அல்லது இதுபோன்ற பிற பாலியல் தொடர்பான கொடூர காட்சிகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். போதைப் பொருள் பயன்பாடு அல்லது கடத்தல் தொடர்பான காட்சிகள் இடம்பெறும் படங்களில் சட்டவிரோத போதை பொருட்கள் ஆரோக்கியத்தை அழித்து நிச்சயம் சிறை தண்டனைகளை பெற்று தரும். போதை பொருட்களை தவிர்ப்போம் என்ற வாசகம் கட்டாயம் இருக்க வேண்டும்.

- Advertisement -

திரைப்படங்களில் வரும் வன்முறை செயல்களில் குழந்தைகளை பாதிக்கப்பட்டவர்களாகவோ குற்றவாளிகளாகவோ அல்லது சாட்சிகளாகவோ சித்தரிக்கும் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும். மாற்று திறனாளிகளை இழிவுபடுத்துதல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான அநாவசிய கொடுமைகள் ஆகியவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் இறையாண்மை ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ அல்லது வெளிநாடுகளுடன் இந்தியாவின் நட்புறவில் பதட்டத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலோ உள்ளடக்கங்கள் இருக்கக் கூடாது என்று தணிக்கை விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றை இனி வரும் திரைப்படங்களில் கட்டாயம் பின்பற்றவும் சென்சார் போர்டு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்