- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடித்து வரும் தளபதி 69 படத்தில் அவரோட கேரக்டர் இதுதான், அட இந்த கேரக்டரில்...

விஜய் நடித்து வரும் தளபதி 69 படத்தில் அவரோட கேரக்டர் இதுதான், அட இந்த கேரக்டரில் ஏற்கனவே அந்த படத்தில் நடிச்சிட்டாரே? – அதிருப்தியடைந்த ரசிகர்கள்!

- Advertisement -

தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது அவரது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தளபதி 69 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி படத்தின் பூஜை நடந்தது. மறுநாள் 5ம் தேதி முதல் கேரளம் மாநிலம் பையனூரில் பாடல் காட்சியுடன் சூட்டிங் துவங்கியது. விஜய் பாடிய இந்த லாஸ்ட் ஒன் பாடலில் 1000க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்று நடனம் ஆடினர்.

அந்த பாடல் சூட்டிங் முடிந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு பணிகளில் தீவிரம் கட்டி வருகிறார், வருகிற 27ம் தேதி விக்கிரவாண்டியில் இந்த அரசியல் மாநாடு நடக்க உள்ளது. இதில் தனது கட்சியின் எதிர்கால திட்டங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் குறித்து நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார். அதன்பிறகு நவம்பர் மாதத்தில், தளபதி 69 படப்பிடிப்பில் இணைகிறார். இந்த முறை சூட்டிங் 20 நாள், அரசியல் பணி 10 நாள் என நடிகர் விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

நடிகர் விஜய் தனது 69வது படத்துடன் நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதனால் எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 69 படம்தான் விஜயின் கடைசி படம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகர் விஜய் தற்போது நடித்துவரும் புதிய படத்தில் அவரது கேரக்டர் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அவர் தளபதி 69 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது அந்த படத்தின் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு போஸ்டர் வெளியான போதே ரிவால்வர் குறியீடுகள் இருந்ததாக கூறப்பட்டது. அதனால் விஜய் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார் என்பது உறுதியானது.

- Advertisement -

ஆனால் அதே நேரத்தில் இதில் நேரடியான போலீஸ் அதிகாரியாக காக்கி யூனிபார்ம் அணிந்து நடிக்காமல், போலீஸ் அதிகாரியாக இருந்து ஏதோ ஒரு சில காரணங்களால் அந்த பணியில் இருந்து விலகி விஜய் இருப்பது போலவும், ஒரு கட்டத்திற்கு பிறகு மீண்டும் போலீஸ் அதிகாரியாக அவர் பொறுப்பேற்று வில்லன்களை பந்தாடுவது போலவும் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே இதே போன்ற ஒரு கேரக்டரில் தெறி படத்தில் விஜய் நடித்திருக்கிறார். தெறி படத்தில் அசிஸ்டென்ட் கமிஷனர் போலீஸ் அதிகாரியாக இருந்து விட்டு, பிறகு மனைவி அம்மாவை வில்லன்கள் கொன்று விடுவதால், தன் மகளுடன் பேக்கரி கடை நடத்தும் கேரக்டரில் நடிகர் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் நடிகர் சூர்யாவும் சிங்கம் 2 படத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்துவிட்டு, பிறகு பள்ளியில் என்சிசி மாஸ்டராக பணி செய்து பிறகு மீண்டும் போலீஸ் அதிகாரியாக பணிசெய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்