மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த நடிகர் நடிகைகள இயக்குனர் இசையமைப்பாளர் என திரைத்துறை சார்ந்த கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடந்தது. அந்த விழாவில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் நடிகர்கள் நடிகைகள் விருதுகளை பெற்றனர்.
இந்தி நடிகர் ஷாருக்கான் இந்தி நடிகை ராணி முகர்ஜி தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் நடிகர் எம்எஸ் பாஸ்கர் நடிகை ஊர்வசி பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் ஜனாதிபதி கையால் தேசிய விருது பெற்றனர். மேலும் இவ்விழாவில் மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதே சாகிப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விழாவில் நாள் 2 என்ற மராட்டிய படத்தில் நடித்ததற்காக திரிஷா தோஷர் என்ற 4 வயது குழந்தைக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய விருது வழங்கினார். அந்த குழந்தை 4 வயது சிறுமியாக இருந்த போதிலும் சேலை அணிந்து வந்து விருதை பெற்றார். ஒட்டுமொத்த அரங்கமே அவரைப் பார்த்து வியந்தது. அப்போது கைகளை தட்டி அவர் விருது பெற்றதை பாராட்டியது.
இந்நிலையில் அந்த குட்டி சிறுமிக்கு நடிகர் மற்றும் எம்பியுமான கமல்ஹாசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தன்னுடைய எக்ஸ் பதிவில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது, என்னுடைய 6 வயதில் முதல் தேசிய விருதை வென்றேன். அந்த சாதனையை முறியடித்த திரிஷா தோஷருக்கு மனம் நிறைந்த என் பாராட்டுகள்.
நீங்கள் இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் மேடம். தொடர்ந்து உங்கள் திறமையை வளர்க்க பாடுபடுங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுக்கும் என் பாராட்டுக்கள் என்று நடிகர் கமல்ஹாசன் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தேசிய விருது பெற்ற அந்த சிறுமியை போனில் தொடர்பு கொண்டு வீடியோ காலில் பேசிய நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய பாராட்டுகளை வாழ்த்துகளை சிறுமிக்கு தெரிவித்தார்.
அரசியல்வாதியாக இருந்தாலும் ராஜ்ய எம்பியாக வலம் வந்தாலும் கமல்ஹாசன் அடிப்படையில் ஒரு சினிமா கலைஞர். 5 வயதில் படப்பிடிப்பு தளத்தில் கேமரா முன்பு நின்றவர். அந்த கலை உணர்வின் காரணமாக தனது 6 வயது தேசிய விருது சாதனையை முறியடித்த 4 வயது சிறுமிக்கு போனில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.





