- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமரன் படம் விஷயத்தில் அதிரடி முடிவு எடுத்த தயாரிப்பாளர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் மீது இப்படி ஒரு...

அமரன் படம் விஷயத்தில் அதிரடி முடிவு எடுத்த தயாரிப்பாளர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் மீது இப்படி ஒரு நம்பிக்கையா? – தரமான சம்பவம் பண்ணியிருக்கிறாரே?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனின் சொந்த பட தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், படத்தின் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார். அயலான் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு அமரன் படத்துக்கு இருந்து வருகிறது.

இந்த படம், தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான படம். அந்த கேரக்டரில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தை பார்த்துவிட்டு, பெருமையுடன் சிவகார்த்திகேயன் மற்றும் டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமியை பாராட்டி மகிழ்ந்திருக்கின்றனர்.

- Advertisement -

அதுமட்டுமின்றி ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தை சந்தித்து, அவரது வாழ்க்கை வரலாறை அமரன் படமாக எடுத்திருப்பதால், ரூ. 25 லட்சம் நிதியுதவி செய்திருக்கிறார். அந்த குடும்பத்தினர் ஏற்க மறுத்த நிலையிலும், கமல்ஹாசன் அவர்களிடம் வலியுறுத்தி, வற்புறுத்தி இந்த பெரிய தொகையை தந்து விட்டு வந்திருக்கிறார்.

அமரன் படம் குறித்து ஆரம்பத்தில் இருந்தே நடிகர் கமல்ஹாசனுக்கு பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருந்து வந்த நிலையில், அவர் எதிர்பார்த்ததை விட அமரன் படம் மிக சிறப்பாக வந்துள்ளது. ஏற்கனவே ஆளவந்தான் படத்தில் ராணுவ வீரராக கமல் நடித்திருந்த நிலையில், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பை கமல் மிகவும் ரசித்துள்ளார். அதனால் சில முக்கிய அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்.

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக அமரன் உள்ளது. மொத்தம் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன், சோனி நிறுவனமும் சேர்ந்து தயாரித்திருந்தது. இதற்காக ரூ. 24 கோடி வரை சோனி நிறுவனம் தயாரிப்பில் செலவு செய்துள்ளது.

சோனி நிறுவனம் செய்த ரூ. 24 கோடியுடன் வட்டியாக ரூ. 12 கோடி சேர்த்து ரூ. 36 கோடியை மொத்தமாக கொடுத்து, சோனி நிறுவனத்தை வழியனுப்பி வைத்துவிட்டார் நடிகரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன். அத்துடன் அமரன் படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சொந்தமாக கமல்ஹாசனே உலகம் முழுவதும் வெளியீடும் செய்கிறார்.

- Advertisement -

சற்று முன்