- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியாவை வலுப்படுத்த உடனடியாக அந்த 2 நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - ராஜ்ய சபா எம்பி...

இந்தியாவை வலுப்படுத்த உடனடியாக அந்த 2 நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – ராஜ்ய சபா எம்பி கமல்ஹாசன் கோரிக்கை!

- Advertisement -

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் ராஜ்யசபா எம்பி நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, என் அன்புள்ள நாட்டு மக்களே இன்று ஈரான் போரின் தாக்கத்தால் ஆழ்ந்த கவலையுடன் ஒரு இந்தியனாக உங்களிடம் பேசுகிறேன். எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. கடல் வர்த்தக பாதைகள் முடக்கப்பட்டுள்ளன.

நமது சமையலறைக்கும் வீடுகளுக்கும் தேவையான எரிசக்தி நமது வயல்களையும் பயிர்களையும் வளர்க்கும் உரங்கள் நமது தொழிற்சாலைகளையும் வாகனங்களையும் இயக்கும் எரிபொருள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளன. இதற்கு பதிலடியாக 60க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே எரிசக்தி சேமிப்பு விதிகளை அமல்படுத்தி உள்ளன. சமீபத்தில் சிங்கப்பூர் பிரதமர் தம் மக்களை கடினமான காலங்களுக்கு தயாராக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

- Advertisement -

நாம் மிகப்பெரிய நாடு. நமது பிரதமர் அடுத்த ஒரு வருடத்துக்கு எரிசக்தியை சேமிக்கும்படி நம்மை கேட்டுள்ளார். இத்தகைய தருணங்களில் தேசிய பொறுப்பு கட்சி அரசியலைத் தாண்டி உயர வேண்டும். நாம் நிச்சயம் நமது நாட்டுக்காக சிறிய சேமிப்புகளை செய்ய வேண்டும். ஒரு மையவாதியாக எனது அரசியல் கூட்டணிகளை தாண்டி நல்ல வேலைகளை பாராட்டுகிறேன்.

பிரதமரின் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் சூரிய மற்றும் காற்று எரிசக்தி திறன் பெரிதும் அதிகரித்துள்ளது. நிலக்கரி எரிவாயு மாற்றம் புதுப்பிக்கத்தக்க மற்றும் அணு எரிசக்தி ஆகியவற்றின் சமீபத்திய முதலீடுகள் என்னை ஊக்கப்படுத்துகின்றன. ஆனால் தியாகம் மக்களிடமிருந்து மட்டும் எதிர்பார்க்கப்படக்கூடாது. அரசுகளும் பங்கு வகிக்க வேண்டும்.

- Advertisement -

எனவே பிரதமரை அனைத்தும் மாநில முதலமைச்சர்களுடன் தேசிய உச்சி மாநாடு நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். உடனடியாக இரண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பெட்ரோல் டீசலில் உள்ள வாட் உள்ளிட்ட மாநில வரிகளை குறைக்க வேண்டும். மெட்ரோ பேருந்து கட்டணங்களை குறைக்க வேண்டும்.

இதனால் மக்கள் தனியார் வாகனங்களை விட்டு பொது போக்குவரத்துக்கு மாறலாம். இன்று சேமிக்கப்படும் ஒவ்வொரு அலகு எரிசக்தியும் நாளை இந்தியாவை வலுப்படுத்தும். சேமிக்கப்படும் ஒவ்வொரு துளி எண்ணெயும் ஏழை இந்தியரை பணவீக்கத்தில் இருந்து பாதுகாக்கும். இந்த நெருக்கடியை ஒன்றாக எதிர்கொண்டால் இந்தியா வலுவாக வெளிவரும் என்று நடிகர் கமல்ஹாசன் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்