- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க நடிச்ச இந்த படம் நல்லா இல்லே, எனக்கு பிடிக்கலே - நடிகர் கமல்ஹாசனிடம் நேரடியாக...

நீங்க நடிச்ச இந்த படம் நல்லா இல்லே, எனக்கு பிடிக்கலே – நடிகர் கமல்ஹாசனிடம் நேரடியாக சொன்ன நடிகர் ரஜினிகாந்த்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடித்த 100வது படம் ராஜ பார்வை. இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் கமல் பார்வையற்ற இளைஞராக நடித்திருப்பார். இந்த படத்தில் நாயகியாக மாதவி நடித்திருந்தார். மேலும் நடிகர் கமல்ஹாசன் முதன்முறையாக தயாரிப்பாளராக மாறியதும் ராஜபார்வை படத்தில் தான். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

ஒரு நேர்காணலில் பங்கேற்றுப் பேசிய நடிகர் கமல்ஹாசன் ராஜபார்வை படம் குறித்து கூறியதாவது, சினிமாவை பொறுத்தவரை நானும் ரஜினியும் ஒரு போட்டியாளர்களாக ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள நினைப்போம். ஆனால் நான் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றால் அடுத்து அதைவிட பெரிய வெற்றியாக ரஜினிகாந்த் பெற்று விடுவார்.

- Advertisement -

அதைப்பார்த்து அதைவிட பெரிய வெற்றி பெற வேண்டும் என்று நான் முயற்சிப்பேன். இது எங்களது ஒவ்வொரு படம் ரிலீஸின் போதும் நடக்கும். சினிமாவில் எங்கள் போட்டி எவ்வளவு கடுமையாக இருந்தாலும் எங்களது நட்பில் அன்று முதல் இன்று வரை எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போல் நல்ல நண்பர்களாக தான் நாங்கள் இருக்கிறோம்.

நான் முதன் முதலாக தயாரித்த படம், நான் நடித்த 100வது படம் ராஜபார்வை. இந்த படத்தைப் பார்த்து விட்டு பலரும் என்னை பாராட்டி பேசினார்கள். ஆனால் ரஜினி மட்டும் ராஜபார்வை படம் சரியில்லை என்று என்னிடம் நேரடியாக சொன்னார். ஏன் என்று நான் கேட்டபோது, டெக்னிக்கலா இந்த படத்தை பெருசா பண்ணியிருக்கீங்க. ஆனால் அதனால் என்ன பிரயோஜனம் என்று கேட்டார்.

- Advertisement -

ரஜினியின் நடித்த பெரிய படம் ஒன்று அப்போது வந்தது. அதை பார்த்துவிட்டு எனக்கு பிடிக்காத சில விஷயங்களையும் அவரிடம் சொன்னேன். இப்படி ஒருவரை ஒருவர் விமர்சிப்பதிலும் நாங்கள் ஒருபோதும் பின்வாங்கியதில்லை. அதே போல் நாங்கள் செய்யும் தவறுகளையும் நாங்கள் விமர்சிக்காமல் இருந்ததில்லை. இந்த மனப்பாங்கு எம்ஜிஆர் சிவாஜியிடம் கூட இருந்திருக்காது.

ஒருமுறை அரசியல் ஈடுபடலாமா வேண்டாமா என்ற கேள்வி ரஜினிக்கு வந்தது. அப்போது என்னிடம் அதுபற்றி ஆலோசனை கேட்டார். நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று கூறி அதற்கு சில விளக்கங்களும் சொன்னேன். அதை ரஜினி ஏற்றுக்கொண்டு என்னுடைய நலனை விரும்பும் வேறு சிலரும் இப்படிதான் என்னிடம் சொன்னார்கள் என்று கூறினார். அந்தளவுக்கு ரஜினி என் பேச்சை மதிப்பவர் என்று நடிகர் கமல்ஹாசன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்