- Advertisement -
Homeபொழுதுபோக்குஎதையும் செய்ய விடாமல் என்னை தடுத்து விடுவார்கள்… அந்த நடிகருக்கும் இந்த பிரச்னை இருக்கிறது -...

எதையும் செய்ய விடாமல் என்னை தடுத்து விடுவார்கள்… அந்த நடிகருக்கும் இந்த பிரச்னை இருக்கிறது – ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த நடிகர் கமல்ஹாசன்!

- Advertisement -

தனது 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படம் மூலம் நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகர் கமல்ஹாசன். இப்போது 70வது வயதிலும் தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்தியன் 3 படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த தக்லைஃப் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிம்பு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

நாயகன் படத்துக்கு பிறகு மணிரத்னம் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான இந்த படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாகிறது. இதில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். அபிராமி அசோக் செல்வன் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் தக்லைஃப் படத்தின் பிரமோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, நான் என்னுடைய அண்ணன், அப்பாவை பார்த்து தான் நடக்க கற்றுக் கொண்டேன். அதுதான் வாழ்க்கை. அதுதான் நடிப்பு. மக்களை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் போதும். ஒவ்வொருவரிடமும் ஒரு கேரக்டர் இருக்கிறது.

அனைத்தையும் என்னால் செய்ய முடியுமா என்று தெரியாது. ஆனால் அவர்களிடம் இருந்துதான் நான் கற்றுக் கொள்கிறேன். தற்போது இருக்கும் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் எங்களுடைய வாழ்க்கையுடன் தொடர்பு விட்டுப் போயிருக்கும்.

- Advertisement -

இதுபோன்ற ஊடகங்களால் தான் நான் அரசியலுக்குச் சென்றேன். ஊடகங்கள் செய்யும் நல்லதையும் சொல்ல வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன். எங்களை நட்சத்திர அந்தஸ்தில் தூக்கி வைத்து எதையும் செய்ய விடாமல் தடுத்து விடுவார்கள். சாதாரண வாழ்க்கையை இழந்தவர்கள் நாங்கள். அதனால் தான் சிலர் விசித்திரமாக நடந்து கொள்கிறார்கள்.

இதை 3 வயதிலிருந்து நானும் சிம்புவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் மொபைல் போனில் உங்களுக்கு தெரியாமல் உங்களை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அங்கிருந்துதான் எங்களுக்கு தேவையான கேரக்டர்களை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என்று நடிகர் கமலஹாசன் வெளிப்படையாக அந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்