- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இயக்குநர் அமீர் வைத்த கோரிக்கை - பருத்திவீரன் பஞ்சாயத்து இன்னும் முடிவுக்கு...

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இயக்குநர் அமீர் வைத்த கோரிக்கை – பருத்திவீரன் பஞ்சாயத்து இன்னும் முடிவுக்கு வரலையே அமீர் சார்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குநர் அமீர், பருத்திவீரன் படம் வெளியான போதே பரபரப்பாக பேசப்பட்ட ஒரு படைப்பாளியாக இருந்தார். நடிகர் கார்த்திக்கு இந்த படம்தான் முதல் அடையாளமாக, பெரிய மாஸ் ஹீரோவுக்கான அந்தஸ்தை பெற்று தந்தது.

அதே போல் இதற்கு முந்தைய படமாக மௌனம் பேசியதே படம் மூலம், நடிகர் சூர்யாவுக்கும் ஒரு நல்ல நடிகருக்கான அந்தஸ்தை, இயக்குநர் அமீர் பெற்றுத் தந்திருந்தார் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இப்படி அண்ணன் சூர்யா, தம்பி கார்த்திக்கு தன் படைப்புகள் மூலம் நல்ல பெயர் பெற்றுக்கொடுத்தவர் இயக்குநர் அமீர்.

- Advertisement -

ஆனால் பருத்திவீரன் தயாரிப்பு குறித்த பஞ்சாயத்து நடந்த போது அமீருக்கு ஆதரவாக நிற்க வேண்டிய சூர்யா, கார்த்தி இருவருமே எதிர்வரிசையில் நின்று, அமீருக்கு எதிராக மறைமுகமாக காய் நகர்த்தினர். அவரது தந்தை சிவக்குமாரும் இதில் அமீருக்கு பக்கபலமாக நிற்கவில்லை என்றே குற்றச்சாட்டே நிலவியது.

ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் அமீர் குறித்து பேசிய நேர்காணலும், அதில் அவர் பயன்படுத்திய வார்த்தைகளும், அமீர் குறித்த விமர்சனங்களும் தமிழ் சினிமா இயக்குநர்களை ஆவேசமடைய செய்தது. இதற்கு பாரதிராஜா, சமுத்திரக்கனி, சசிக்குமார், கரு பழனியப்பன் போன்றோர் எதிர்ப்பை வலுவாக காட்டியதால் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து ஒளிந்துக்கொண்டார். ஆனால் இன்னும் பருத்திவீரன் தயாரிப்பு பஞ்சாயத்து முடிவுக்கு வரவில்லை.

- Advertisement -

இந்நிலையில், இயக்குநர் அமீர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதில், மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு என, கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் திறக்கவுள்ளது மகிழ்ச்சி தருகிறது. பாரம்பரியமும், வீரமும் நிறைந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அரசு பணி இட ஒதுக்கீட்டில் பணிவாய்ப்பு தர வேண்டும்.

ஏனெனில் மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் வென்ற வீரர்களும், அரசு பணி வாய்ப்பில் பணி ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே, இந்த கோரிக்கையை பரிசீலித்து ஆவண செய்யுமாறு கூறியிருக்கிறார். ஜல்லிக்கட்டு வீரர்களுக்காக, பணிவாய்ப்பு கேட்டு முதல்வர் ஸ்டாலினிடம் அமீர் கோரிக்கை வைத்திருப்பது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்