- Advertisement -
Homeபொழுதுபோக்குடாணாக்காரன் இயக்குனருடன் கார்த்தி நடிக்கப் போகும் திரைப்படத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா... கேட்கும்போதே புல்லரிக்குதே சாமி...

டாணாக்காரன் இயக்குனருடன் கார்த்தி நடிக்கப் போகும் திரைப்படத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா… கேட்கும்போதே புல்லரிக்குதே சாமி…

- Advertisement -

கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் மெய்யழகன். 96 திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த பிரேம்குமார் தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். உறவுகளின் உன்னதத்தை எடுத்துக் கூறிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

 

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தற்போது வா வாத்தியார் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் கார்த்தி. நலன் குமாரசாமி இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏற்கனவே இவரது இயக்கத்தில் வெளியான சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் என இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான படமாக அமைந்தது.

 

- Advertisement -

இதனால் இந்த திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. வா வாத்தியார் திரைப்படம் எம்ஜிஆர் ரசிகர்களை தொடர்பு படுத்தியது. அதிலும், கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ராஜ்கிரன் எம்ஜிஆர் ரசிகராக வர, சத்யராஜ் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

 

அனேகமாக அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வாத்தியார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று பேசிக்கொள்கிறார்கள். இந்த நிலையில் தற்போது, தனது 28-வது திரைப்படமான சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. ஏற்கனவே இதன் முதல் பாகம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.

 

கார்த்தி நடித்த திரைப்படங்களிலேயே, அதிக பட்ஜெட்டுடன் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் ரெடியாகி வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனது 29 ஆவது திரைப்படத்தில் தற்போது கமிட் ஆகிவிட்டார் கார்த்தி. இதனை இயக்குவது வேறு யாரும் அல்ல. டாணாக்காரன் திரைப்படத்தின் மூலம் பலரையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் தமிழ் தான்.

 

இவர் அசுரன், ஜெய் பீம், விடுதலை ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவர் கார்த்தியை வைத்து இயக்க இருக்கும் திரைப்படம் பீரிடிக் திரைப்படமாக உருவாக இருக்கிறது. கடல் சார்ந்த பகுதியை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாகவும், இதற்காக இயக்குனர் ராமேஸ்வரத்தை தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கார்த்தியை வைத்து கேங்ஸ்டர் பாணியில் இந்த திரைப்படத்தை எடுக்க தமிழ் திட்டமிட்டுள்ளாராம். இரண்டு பாகங்களாக இந்த திரைப்படம் எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

- Advertisement -

சற்று முன்