- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை ரோஜா திடீரென மருத்துவமனையில் அனுமதி! அவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

நடிகை ரோஜா திடீரென மருத்துவமனையில் அனுமதி! அவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

- Advertisement -

1991 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான “பிரேம தப்பாசு” என்ற திரைப்படத்தின் மூல திரையுலகிற்கு அறிமுகமானவர் ரோஜா. இவர் 1992 ஆம் ஆண்டு “செம்பருத்தி” திரைப்படத்தின் மூலம்  தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். அதனை தொடர்ந்து தமிழில் ரஜினிகாந்த், பிரபு தேவா, சத்யராஜ், சரத்குமார், பிரபு போன்ற நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு நடித்த ரோஜா, கடந்த 2002 ஆம் ஆண்டு தனது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நடிகை ரோஜா “செம்பருத்தி” திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே இருவருக்கும் காதல் மலர்ந்துவிட்டது. அதனை தொடர்ந்து ரோஜா பல திரைப்படங்களில் நடித்த பிறகுதான் திருமணம் செய்துகொண்டார். இதனிடையே 1998 ஆம் ஆண்டு ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட ரோஜா, அதன் பின் 2011 ஆம் ஆண்டு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

- Advertisement -

அந்த கட்சியின் சார்பாக நாகரி என்ற தொகுதியில் போட்டுப்போட்டு இரண்டு முறை வென்றார். அதனை தொடர்ந்து தற்போது ஆந்திரா மாநில அரசின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி வெளிவந்துள்ளது.

அதாவது ரோஜா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென கால் வீக்கம் ஏற்பட்டுள்ள காரணமாக நேற்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

எனினும் அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றார்களாம். திடீரென ஆந்திர மாநிலத்தின் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்