- Advertisement -
Homeபொழுதுபோக்குடில்லி திரும்ப வருவாரு... கைதி 2 திரைப்படம் குறித்து முக்கியமான அப்டேட்டை கொடுத்த கார்த்தி...

டில்லி திரும்ப வருவாரு… கைதி 2 திரைப்படம் குறித்து முக்கியமான அப்டேட்டை கொடுத்த கார்த்தி…

- Advertisement -

நடிகர் கார்த்திக்கிற்கு கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் ஜப்பான் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இதில் ஜப்பான் திரைப்படம் அவரது 25 வது படமாக வெளியிடப்பட்டது. ராஜ்முருகன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து தனது அடுத்தடுத்த திரைப்படங்களை வெற்றி படம் ஆக்குவதற்கான முயற்சியில், கூடுதலாக உழைத்து வருகிறார் நடிகர் கார்த்தி. அவரது 26 வது திரைப்படத்தை, நலன் குமாரசாமி இயக்குகிறார். இவர் ஏற்கனவே சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை எடுத்திருந்தார்.

- Advertisement -

இதில் சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. விறுவிறுப்பாக இதன் சூட்டிங் பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது, படம் குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க கார்த்தியும் தனது 27வது படத்தில் கவனம் செலுத்த சென்றார்.

இந்தத் திரைப்படத்தை, 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் எடுத்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படபிடிப்பு நடைபெற்றது. இந்த திரைப்படம் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்ரீ திவ்யா இதில் கார்த்திக்கு சகோதரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் சூட்டிங் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த இரண்டு படங்களுக்கு பிறகு, சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் கார்த்தி கவனம் செலுத்த இருக்கிறார்.

இதனிடையே அவரது கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்தும் கேள்வி எழுந்து வந்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜும் தற்போது ரஜினி படத்திற்கான வேலையில் பிஸியாக இருப்பதால், கைதி 2 குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உள்ள கார்த்திக், அதன் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதன்படி கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் கால சூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று கூறியுள்ளார். டில்லி திரும்ப வருவார் என்றும் கார்த்தி தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்