- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சேதுபதியை தொடர்ந்து பின்னணி குரல் கொடுக்கும் கார்த்தி... மார்க் ஆண்டனியில் இருக்கும் சுவாரஸ்யம்...

விஜய் சேதுபதியை தொடர்ந்து பின்னணி குரல் கொடுக்கும் கார்த்தி… மார்க் ஆண்டனியில் இருக்கும் சுவாரஸ்யம்…

- Advertisement -

த்ரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். ஜிவி பிரகாஷ் குமார், கயல் ஆனந்தி, மனிஷா யாதவ் உள்ளிட்டோர் நடித்த இந்தத் திரைப்படம், இரட்டை அர்த்த வசனங்கள், முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள், பெண்களைக் கொச்சைப்படுத்தும் திரைக்கதையுடன் வெளியானது. அன்றைய தேதியில் இளைஞர்கள் அந்தப் படத்திற்கு கொடுத்த வரவேற்பால், கமர்சியல் ஹிட் அடித்தது திரிஷா இல்லனா நயன்தாரா.

இதைத்தொடர்ந்து அந்த படத்தின் இயக்குனர் அடுத்ததாக எடுத்த திரைப்படம்தான் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். மைக்கேல் ராயப்பன் தயாரித்த இந்த திரைப்படத்தில், நடிகர் சிம்பு மூன்று வேடங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் படம் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த, படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆசை ஆசையாக திரையரங்குக்கு சென்றவர்களை, சுவற்றில் முட்ட வைத்து மீளா துயரத்தை கொடுத்த இந்த திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் பின்னடைவை சந்தித்தது. மேலும் படப்பிடிப்பிற்கு ஒரு நாள் கூட சிம்பு சரியாக வரவில்லை என்றும், தனக்கு இவ்வளவு நஷ்டம் ஏற்பட்டதற்கு காரணம் அந்த நடிகர்தான் என்றும் பரபரப்பு புகார் அளித்தார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

சிம்புவுக்கு பெரும் பின்னடைவை கொடுத்த இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் மேல் இருந்த நம்பிக்கையையும் இழக்கச் செய்தது. இதைத் தொடர்ந்து வேறு பட வாய்ப்பு இல்லாமல் தவித்த ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் – எச். வினோத் கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து பிரபு தேவாவை வைத்து பகீரா எனும் திரைப்படத்தை இயக்கிய அவர், மீண்டும் தோல்வியை சந்தித்தார்.

இந்த நிலையில் தற்போது விஷால், எஸ் ஜே சூர்யாவை வைத்து மார்க் ஆண்டனி என்னும் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். செல்போனில் டைம் ட்ராவலை மையமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்திற்கு நடிகர் கார்த்தி பின்னணி குரல் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முதல் காட்சியில், ரசிகர்களுக்கு புரியும் வகையில் கதையை பின்னணி குரலோடு விவரித்து இருப்பார் கமல்ஹாசன். இதேபோல், மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் விஜய் சேதுபதி குரல் கேட்க, திரையரங்குகளில் அது ரசிக்கும் வகையில் இருந்தது.இப்படி முன்னணி ஹீரோக்கள், பிற படங்களுக்கு குரல் கொடுத்து வரும் சூழலில், அந்தப் பட்டியலில் தற்போது இணைந்திருக்கிறார் கார்த்தி. மார்க் ஆண்டனியில் இரு கேங்ஸ்டர்கள் குறித்த வாழ்க்கையை கார்த்திதான் பின்னணி குரலோடு விளக்குவாராம். இந்தத் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது

சற்று முன்