- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கார்த்தி இந்த விஷயத்தை எப்போது ஆரம்பித்தார் என்று யாருக்குமே தெரியலையே - இவருக்கும் அந்த...

நடிகர் கார்த்தி இந்த விஷயத்தை எப்போது ஆரம்பித்தார் என்று யாருக்குமே தெரியலையே – இவருக்கும் அந்த பேரு வாங்க ஆசை வந்திருக்குமோ?

- Advertisement -

நடிகர் சிவக்குமார் மகன்களில் ஒருவர் கார்த்தி. இயக்குநர் அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் படத்தில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரை மாஸ் ஹீரோவாக காட்டியிருந்தார் இயக்குநர் அமீர். மிகப்பெரிய அடையாளமாக நடிகர் கார்த்திக்கு இருப்பது பருத்திவீரன் தான். அதன்பிறகு 24 படங்களில் நடித்தும், இப்போதும் பருத்திவீரன் கார்த்தி என்றுதான் ரசிகர்கள் அழைக்கின்றனர்.

நடிகர் கார்த்தியின் அண்ணன் சூர்யா, கார்த்தி சினிமாவுக்கு வரும் பல ஆண்டுகளுக்கு முன்பே, வந்துவிட்டார். அவருக்கு மௌனம் பேசியதே, நந்தா, காக்க காக்க படங்கள்தான் நல்ல அறிமுகத்தை பெற்றுத் தந்தன. தொடர்ந்து கஜினி, ஏழாம் அறிவு, சிங்கம் போன்ற படங்களால் முன்னிலை நாயகனாக உயர்ந்த சூர்யா இப்போது பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

நடிகர் கார்த்தி நடித்த பருத்திவீரன் படத்துக்கு பிறகு அவரது சில படங்கள் மட்டுமே பெரிய வெற்றியை பெற்றன. குறிப்பாக தோழா, கடைக்குட்டி சிங்கம், தீரன் அதிகாரம் 1, கைதி, நான் மகான் அல்ல, சர்தார் போன்ற சில படங்கள் மட்டுமே ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களாக இருந்தன. குறிப்பாக அவரது 25 வது படம் ஜப்பான், மிக மோசமான பிளாப் படமாக அமைந்தது.

நடிகர் கார்த்தி, தனது ரசிகர் மன்றத்தை நடிகர் கார்த்தி மக்கள் நலமன்றம் என்ற பெயரில் மாற்றி, நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் இந்த அமைப்பு சார்பில் ரூ. 100 மதிப்புள்ள வெஜிடபிள் பிரியாமணி ரூ. 10க்கு தந்து வருகின்றனர். சென்னை வளசரம்பாகத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் தினமும் 100க்கும் மேற்பட்ட இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.

வாரத்தில் ஒருநாள் ஞாயிறு தவிர்த்து மற்ற நாட்களில் தினமும் மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இப்படி உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு தினமும் உணவு தரப்படுகிறது. லாபநோக்கம் இன்றி, மக்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தை பலரும் பாராட்டுகின்றனர். குறைந்த விலையில் தரமான உணவு என்பது மிகவும் சிறந்த சேவை என்று கார்த்தியை வாழ்த்துகின்றனர்.

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பற்றி பேசும் போது, அவரை பலரும் பாராட்டிய வார்த்தைகளில், பசி என்று வந்தவர்களை சாப்பிட வைத்து அழகு பார்த்தவர் என்பர். அதுபோல் நடிகர் கார்த்தியும் இதுபோல் மக்களுக்கு உணவு தந்து, மக்களின் நல்வாழ்த்துகளை பெற்று வருகிறார். எதிர்காலத்தில் இவரும் ஒரு கேப்டன் போல, பசி தீர்த்த கருணையாளராக பாராட்டப்படலாம். அதே வேளையில் விஜயகாந்த், கார்த்தி வரிசையில் நடிகர்கள் பலரும் இப்படி ஏழை மக்களுக்கு உணவு திட்டத்தை அறிவித்து, தினமும் மக்களின் பசியாற்ற முன்வந்தால் நன்றாக இருக்கும்.

சற்று முன்