- Advertisement -
Homeபொழுதுபோக்குயோகிபாபுவுக்கு அந்த அட்வைஸ் அடிக்கடி பண்ணுவேன், என் அப்பா எனக்காக கதை கேட்டது இல்லை -...

யோகிபாபுவுக்கு அந்த அட்வைஸ் அடிக்கடி பண்ணுவேன், என் அப்பா எனக்காக கதை கேட்டது இல்லை – சர்தார் 2 பட விழாவில் ஓபனாக பேசிய நடிகர் கார்த்தி!

- Advertisement -

சமீபத்தில் நடந்த சர்தார் 2 படவிழாவில் பேசிய நடிகர் கார்த்தி கூறியதாவது, இந்த படத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். அவர் தீவிரமான முருக பக்தர். எந்த முருகன் கோயிலுக்கு சென்றாலும் எனக்கு அந்த கோயில் போட்டோ அனுப்புவார். அடிக்கடி முருகர் போட்டோக்களை எனக்கு அனுப்புவார்.

அவரை நான் முருகா முருகா என்றுதான் கூப்பிடுவேன். அவரது பயணம் சாதாரணமானது அல்ல. 50 ரூபாய்க்கு வேலை பார்த்திருக்கிறார். பல நாட்கள் தயாரிப்பாளர் இயக்குனர் வீட்டு கதவை தட்டி இந்த நிலைக்கு வந்திருக்கிறார். படத்தில் தனக்கான சீனை அப்படி மாற்றுகிறார். அவர் ரைடக்டரும் கூட. தயாரிப்பாளர் நல்லா இருக்கணும்னு நினைக்கிறார்.

- Advertisement -

அதனால் அவர் தோல்வி அடைவதில்லை. தினமும் 24 மணி நேரமும் உழைக்கிறார். அடிக்கடி வீட்டுக்கு போய் குழந்தையை பாருங்க இல்லைன்னா உங்க முகத்தை மறந்துவிடுவார்கள் என்று அவரிடம் அடிக்கடி சொல்லுவேன். அவர் கஷ்டப்பட்டு வந்தவர். நடிகர் சங்கத்துக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.

எனக்காக அப்பா சிவக்குமார் எந்த கதையும் கேட்டது இல்லை. நீங்களே முட்டி மோதி வரட்டும் என்று நினைத்துவிட்டார். அவர் எவ்வளவு பெரிய ஹீரோ? ஆனால் என் படங்கள் குறித்து அவர் எப்போதுமே தலையிட்டது இல்லை. நான் அமெரிக்காவிலிருந்து இந்தியா வரேன்னு சொன்னதும் அம்மா சந்தோஷப்பட்டார்கள்.

- Advertisement -

அங்கே வெள்ளைக்கார பொண்ணு கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சு இருக்காங்க. அந்த தகுதி எனக்கு இல்லைன்னு அவங்களுக்கு தெரியல. நான் டைரக்சன் பண்ண போறேன்னு சொன்ன உடனே உனக்கு முடி கொட்டி விடுமே என்று சொன்னாங்க. அதனால் தான் நான் நடிக்க வந்துட்டேன்.

என்னோட முதல் படத்தில் இருந்து ரசிகர்கள் எனக்கு ஆதரவு கொடுத்திருக்காங்க. என்னோட ரசிகர்களை நான் 3 ஆண்டுகளாக கஷ்டப்படுத்தி இருக்கிறேன். இந்த தடவை ரசிகர்கள் என்ஜாய் பண்ணுற மாதிரி சர்தார் 2 படம் பண்ணி இருக்கிறேன் என்று நடிகர் கார்த்தி அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்