- Advertisement -
Homeபொழுதுபோக்குபுரட்சித் தலைவர் எம்ஜிஆரிடம் இருந்த அபாரமான அந்த ஆற்றல் - நடந்த சம்பவங்களை குறிப்பிட்டுச் சொன்ன...

புரட்சித் தலைவர் எம்ஜிஆரிடம் இருந்த அபாரமான அந்த ஆற்றல் – நடந்த சம்பவங்களை குறிப்பிட்டுச் சொன்ன பிரபல நடிகர்!

- Advertisement -

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்த பல படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் சோ ராமசாமி. அவரை வாத்தியார் வாத்தியார் என்று சொல்லி அவர் காமெடியனாக சோ நடித்திருப்பார். எம்ஜிஆருடன் நெருக்கமாக பழகிய நடிகர்களில் சோ மிக முக்கியமானவர். எம்ஜிஆரை போலவே ஜெயலலிதாவுக்கு ஒரு அரசியல் ஆசானாக சோ ராமசாமி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சோ ராமசாமி கூறியதாவது, எம்ஜிஆரின் ஞாபக சக்தி அசாத்தியமானது. எப்படி இதையெல்லாம் அவர் துல்லியமாக நினைவில் வைத்திருக்கிறார் என்று ஆச்சர்யமாக இருக்கும். ஜெய்ப்பூரில் அடிமைப்பெண் ஷூட்டிங் நடந்தது. என்னுடன் சில நண்பர்களும் அங்கு வந்திருந்தார்கள். நான் அங்கு போனதும் மேக்கப் போடப் போய்விட்டேன்.

- Advertisement -

என்னுடைய நண்பர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டை வேடிக்கை பார்க்கப் போய்விட்டார்கள். அப்படி முதலில் அங்கு போன என் நண்பர்களைப் பார்த்துவிட்டார் எம்.ஜி.ஆர். அவர்களுடைய பெயர்களை முதற்கொண்டு சரியாக நினைவில் வைத்து நீங்க தானே ரெங்காச்சாரி? என்று அவரவர் பெயர்களைச் சொல்லி அவர் கூப்பிட்டு விசாரித்ததும் அவர்கள் அசந்துபோய் அவரைப் புகழ ஆரம்பித்து விட்டார்கள்.

அதே மாதிரி இன்னொரு நிகழ்ச்சி, எங்கள் நாடகக்குழுவில் நடிக்கும் நண்பனான நீலு ஒரு முறை ஷூட்டிங்கிற்கு வந்திருந்தான். கல்கத்தாவில் வேலை பார்த்ததால் அங்கு ஒரு வருஷம் இருந்துவிட்டு அப்போதுதான் சென்னைக்கு வந்திருந்தான். அதற்கு 2 நாட்களுக்கு முன்புதான் எங்களுடைய நாடகம் ஒன்றிற்கு தலைமை தாங்கியிருந்தார் எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தில் நீலு நடிக்கவில்லை.

- Advertisement -

எம்.ஜி.ஆரிடம் அவனை அழைத்துக் கொண்டுபோய், இவன் தான் நீலு. எங்க டிராமாக்களில் நடிக்கிறான் என்று அறிமுகப்படுத்தினேன். எனக்குத்தான் இவரைத் தெரியுமே. உங்க நாடகத்தில் பார்த்தேனே என்றார் எம்.ஜி.ஆர். சார்.. 2 நாட்களுக்கு முன்னாடி நீங்க பார்த்த டிராமாவில் இவன் நடிக்கவே இல்லை. இன்னைக்குத்தான் சென்னைக்கு வந்திருக்கான். இவனைத் தெரியும்னு சொல்றீங்களே என்று நான் குறுக்கிட்டேன்.

நான் ரெண்டு நாட்களுக்கு முன்னாடி பார்த்த நாடகத்தில் இவர் நடிச்சதா நான் சொன்னேனா? உங்க நாடகத்தில்ன்னுதானே சொன்னேன். போன வருஷம் நான் பார்த்த உங்க நாடகத்தில் வக்கீல் வேஷம் போட்டவர் இவர்தானே? அதைத்தான் நான் சொன்னேன் என்றார். அதை கேட்டுக் கொண்டிருந்த நானும், நண்பர்களும் திகைக்கிற அளவுக்கு இருந்தது. அவருடைய அபாரமான நினைவாற்றல் என்று நடிகர் சோ ராமசாமி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்