- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் நடிக்கப் போறேன் என்று சொன்னேன்… என் அப்பா சொன்ன ஒரே அட்வைஸ் அதுதான்…...

சினிமாவில் நடிக்கப் போறேன் என்று சொன்னேன்… என் அப்பா சொன்ன ஒரே அட்வைஸ் அதுதான்… அதை என்னால் மீற முடியலே – ஓபனாக பேசிய நடிகர் கார்த்தி!

- Advertisement -

தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா சென்னையில் நடந்தது. தமிழக அரசு சார்பாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர்கள் கார்த்தி விஜய் சேதுபதி மணிகண்டன் உள்ளிட்டோர் திறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது, தமிழ்நாட்டுக்கு எப்போதும் ஒரு சிறப்பு இருக்கிறது. ஒரு மாணவன் நன்றாக படிக்கிறான் என்றால் சொத்தை வித்தாவது படிக்க வைத்து விடுவார்கள். கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

- Advertisement -

படித்துக்கொண்டிருந்த ஒரு சமயத்தில் சினிமாவில் நடிக்கச் செல்கிறேன் என்று நான் என் அப்பாவிடம் சொன்னேன். அப்போது அவர் என்னிடம், எது கை கொடுக்கவில்லை என்றாலும் படிப்பு கைகொடுக்கும். எனவே முதலில் படி என்றுதான் என்னிடம் சொன்னார். அதற்கு பிறகுதான் நான் பொறியியல் மற்றும் மாஸ்டர்ஸ் படித்தேன்.

பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு கல்விதான் உதவுகிறது. எது சரி எது தவறு உள்ளிட்ட பல விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு கல்வியே பயனளிக்கும். நான் அமெரிக்காவுக்கு சென்று படிக்கும் போது அரசு பள்ளியில் படித்தவர்கள் தான் பெரிய பொறுப்பில் இருந்தார்கள். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டியது இப்போது முக்கியமான விஷயமாக இருக்கிறது.

- Advertisement -

ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருக்கும் காலகட்டத்தில் அரசு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது மிக மிக முக்கியமான அம்சமாகும். இதை ஏற்படுத்திக் கொடுத்த அரசுக்கு நன்றி. ஏஐ மூலம் நிறைய பேருக்கு வேலை பறி போகும் என்று சொல்கிறார்கள். ஆனால் பல தொழில் முனைவோர்கள் இந்தியாவில் இது வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள் என்று நடிகர் கார்த்தி அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

வழக்கமாக அரசு விழாக்களில் முதல்வர் துணை முதல்வர் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ எம்பிகள் தான் அதிகமாக கலந்துக்கொள்வார்கள். சமீபகாலமாக அரசு விழாக்களில் நடிகர்கள் கலந்துக்கொண்டு வருகிறார். இதன்மூலம் திமுக தனக்கு தான் கலைத்துறையின் ஆதரவு அதிகமாக இருப்பதாக காட்டுகிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்