இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் கருப்பு. இந்த படம் 340 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியுள்ளது. ஆனால் இந்த படத்தில் சூர்யா வரும் காட்சிகள் மிக குறைவுதான். மேலும் படத்தில் வில்லனாக நடித்துள்ள ஆர்ஜே பாலாஜிக்கு தான் நடிப்பதற்கான வாய்ப்பு நிறைய இருந்தது.
எனினும் கருப்பசாமி கேரக்டரில் வந்த நடிகர் சூர்யாவுக்கு இது மாஸ் ஹிட் படமாக அமைந்துவிட்டது. நடிகர் சூர்யாவின் சினிமா பயணத்தில் முதன்முறையாக 340 கோடி ரூபாய் வசூலித்த முதல் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சிங்கம் 2 வசூலித்த 160 கோடி ரூபாய் தான் பெரிய வசூலாக இருந்தது.
இந்த சந்தோஷத்தில் இயக்குனர் இசையமைப்பாளர் எடிட்டர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகிய 4 பேருக்கு சூர்யா விலை உயர்ந்த கார்களை பரிசளித்தார். இதையடுத்து இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். இந்த படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
அதன்பிறகு மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தனது 47வது படத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு சூர்யா 47 என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து இயக்குனர் ஜித்து மாதவன் கூறியதாவது, சிங்கம் படத்திற்கு பிறகு இந்த படத்தில் சூர்யா மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
சூர்யாவுக்காக திரைக்கதையை மிக நேர்த்தியாக உருவாக்கி உள்ளேன். கண்டிப்பாக சூர்யாவுக்கு இன்னொரு சூப்பர் ஹிட் படமாக இது இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும், இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த ஆலோசனை நடந்து வருகிறது கூடிய சீக்கிரம் அதுகுறித்த அப்டேட் வெளியாகும் என்றும் ஜித்துமாதவன் தெரிவித்துள்ளார்.
ஆனால் சூர்யா 47 படத்துக்கு சரவெடி என டைட்டில் வைக்க திட்டமிட்டு உள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி விடுகிறது ஏற்கனவே வெடி என்ற பெயரில் நடிகர் விஷால் நடித்திருக்கிறார். சரவெடி என்ற டைட்டில் தெலுங்கு டப்பிங் படம் போல உள்ளது. மாஸ் ஆன டைட்டில் வைக்க வேண்டும் என்று சூர்யா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.





