- Advertisement -
Homeபொழுதுபோக்குபோட்ட காசை எடுத்துட முடியுமா? தவிப்பில் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் - ரசிகர்களை கதறவிட்ட இந்தியன்...

போட்ட காசை எடுத்துட முடியுமா? தவிப்பில் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் – ரசிகர்களை கதறவிட்ட இந்தியன் 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

- Advertisement -

கடந்த 28 ஆண்டுகளுக்கு முன், 1996ம் ஆண்டில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் இந்தியன். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற மாஸ் ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இந்தியன் தாத்தாவாக சேனாபதி கேரக்டரில் நடித்த கமலுக்கு, மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் லைகா புரொடக்சன் தயாரிப்பில் நேற்று இந்தியன் 2 படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் 750 திரைகளிலும், உலகம் முழுவதும் 5000 திரைகளிலும் இந்தியன் 2 படம் திரையிடப்பட்டது. தமிழகத்தில் அரசு அனுமதியுடன் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கும் தொடர்ந்து நான்கு காட்சிகளும் என நேற்று ஒரு நாள் ஐந்து காட்சிகள் திரையிடப்பட்டது.

- Advertisement -

பொதுவாக கமல்ஹாசன் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆரவாரமான வரவேற்பு இருக்கும் என்ற நிலையில், நேற்று இந்தியன் 2 படம் வெளியானது. ஆனால் படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனங்களை பார்க்கும்போது, இப்படி ஒரு படம் வந்திருக்கவே வேண்டாம் என்பதுதான் அவர்களது கருத்தாக இருந்தது. கமல்ஹாசன் படமாகவும் இல்லை, இது ஷங்கர் படமாகவும் இல்லை என்று ரசிகர்கள் விமர்சித்தனர்.

மேலும் அனிருத் இசை மிகவும் மோசமாக உள்ளது. படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள் உள்ளன. இந்தியன் 2 படத்தில் திரைக்கதை என்று எதுவுமே இல்லை. கமல்ஹாசன் விதவிதமான கெட்டப்புகளில் வருவது மட்டுமே இந்த படத்தை வெற்றி பெற செய்து விடாது. ஷங்கர் எதற்காக இந்த படத்தை எடுத்தார் என்றே தெரியவில்லை. இப்படி ஒரு படம் எடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதுதான் படம் பார்த்த ஏராளமான ரசிகர்களின் கருத்தாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

லைகா போன்ற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம், நூற்றுக்கணக்கான கோடிகளை கொட்டிக் கொடுத்திருக்கிறது. கமல்ஹாசன் போன்ற சிறந்த நடிகர் கிடைத்தும், திரைக்கதையில் ஷங்கர் ஏன் இப்படி ஏமாற்றினார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். படத்தில் தேவையில்லாத காட்சிகளே மிக அதிகம். கிளைமாக்ஸ் எல்லாம் உட்கார முடியவில்லை என்றும் ரசிகர்கள் புலம்புகின்றனர்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நேற்று வெளியான இந்தியன் 2 படம் உலகம் முழுவதும் 61 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 53.7 கோடியும், வெளிநாடுகளில் 7.76 கோடியும் இந்தியன் 2 படம் வசூல் செய்துள்ளது.தமிழ்நாட்டில் மட்டுமே 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் வரும் நாட்களில் இந்தியன் 2 படத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கும், போட்ட காசை எடுக்க முடியுமா என்ற ஒரு தவிப்பில்தான் இந்த படத்தை தயாரித்த லைகா புரொடக்சன் நிறுவனம் இருந்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்