- Advertisement -
Homeபொழுதுபோக்குஅண்ணனுக்கு பெரிய வில்லனா இருந்தது அவர்தான், அந்த விஷயத்தில் சூர்யா மீது ரொம்பவும் கோபமாக இருந்திருக்கேன்...

அண்ணனுக்கு பெரிய வில்லனா இருந்தது அவர்தான், அந்த விஷயத்தில் சூர்யா மீது ரொம்பவும் கோபமாக இருந்திருக்கேன் – ஓபனாக பேசிய நடிகர் கார்த்தி

- Advertisement -

நடிகர் சிவக்குமாரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இருவருமே தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகர்களாக உள்ளனர். மெய்யழகன் படத்தை அடுத்து இப்போது சர்தார் 2 படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். கங்குவா படத்துக்கு பிறகு ரெட்ரோ படத்தில் நடித்து முடித்த சூர்யா, இப்போது தனது 45வது படத்தில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா, இளைய மகன் கார்த்தி. இதுதவிர மகள் ஒருவரும் இருக்கிறார். நடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இப்போது மும்பையில் குடும்பத்துடன் குடியேறி விட்டார். நடிகர் கார்த்தி, உறவினர் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர் தந்தை சிவக்குமாருடன் கூட்டுக்குடும்பமாக சென்னையில் இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் கார்த்தி தனது அண்ணன் நடிகர் சூர்யா குறித்த பல விஷயங்களை அங்கிருந்த ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நானும் அண்ணன் சூர்யாவும் சின்ன வயதில் பல விஷயங்களுக்காக பயங்கரமாக சண்டை போட்டிருக்கிறோம். சண்டைக்கான காரணங்கள் பல இருக்கின்றன.

நான் பிளஸ் 2வில் நல்ல மார்க் வாங்கியதால் எனக்கு மாமா பைக் வாங்கி கொடுத்தார். என்னுடைய காலேஜ் ரொம்ப தூரம் என்பதால் பைக்கில் போக முடியாது. அதனால் வாரத்தில் 5 நாட்கள் அண்ணன் சூர்யா தான் என் பைக்கை எடுத்துக் கொள்வார். சனி ஞாயிறு 2 நாட்கள் மட்டுமே அந்த பைக் எனக்கு கிடைக்கும். அந்த நாட்களில் பைக்கை நான் எடுத்துக்கொள்வேன்.

- Advertisement -

அதற்காக சனிக்கிழமை காலையில் நான் பைக்கை துடைத்து சுத்தப்படுத்தி கழுவி பளபளப்பாக்கி நிறுத்திவிட்டு குளிக்க செல்வேன். வந்து பார்த்தால் பைக் இருக்காது. அண்ணன் சூர்யா எடுத்து சென்றுவிடுவார். நீ நல்லாவே இருக்க மாட்டே என்று கோபத்தில் சாபம் கூட விட்டிருக்கிறேன். என் பைக்கை சனி ஞாயிறு தினத்தில் கூட எனக்கு தராவிட்டால் எனக்கு கோபம்தானே வரும். சூர்யா மேல் அப்போது நிறைய கோபப்பட்டிருக்கிறேன்.

எங்க அப்பா தான் அண்ணனுக்கு பெரிய வில்லன். நைட் செகண்ட் ஷோ போகக் கூடாது என் அப்பா சொல்லி இருக்கிறார். இரவில் லேட்டாக வரக்கூடாது என்பது அப்பாவின் உத்தரவு. ஆனால் லேட் நைட்டில் காம்பவுண்ட் கதவை அண்ணன் திறக்கும் போது நான் போய் அப்பாவிடம், அண்ணன் லேட்டாக வருவதை சொல்லி விடுவேன். அப்பா கோபமாகி அண்ணனை மாடியில் நின்றுக்கொண்டே திட்டுவார். சூர்யா பரிதாபமாக கீழே நின்று கொண்டிருப்பார். நான் நல்ல பிள்ளை போல அதை பார்த்துக்கொண்டு இருப்பேன் என்று அந்த நேர்காணலில் நடிகர் கார்த்தி பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்