- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதை பார்த்துவிட்டு நாள் முழுவதும் கதறி கதறி அழுத நடிகர் கார்த்தி, அவரை சமாதானம் செய்த...

அதை பார்த்துவிட்டு நாள் முழுவதும் கதறி கதறி அழுத நடிகர் கார்த்தி, அவரை சமாதானம் செய்த அப்பா சிவக்குமார் – ஆனால் சூர்யா ஜாலியாக இருந்துட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் சிவக்குமார். கலைத்துறையில் உள்ள பலரும் புகை மது மாது சூது என தவறான பழக்கங்களுக்கு அடிமையாக இருந்த நிலையில், ஆரம்பம் முதல் சிறந்த ஒழுக்கம் மிக்க மனிதராக வாழ்ந்து காட்டியவர் சிவக்குமார். அவரை போல் ஒழுக்கத்தில் சிறந்தவராக சினிமாவில் யாரையும் சொல்லிவிட முடியாது.

அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி இருவரும் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். அவரது மருமகள் ஜோதிகாவும் சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வருகிறார். நடிகர் சிவகுமார் தமிழ் சினிமாவில் பிஸியாக இருந்த காலகட்டத்தில் அவர் நடித்த படங்களில் மிக முக்கியமான படம் நெருப்பிலே பூத்த மலர்.

- Advertisement -

இந்த படத்தில் சிவக்குமாருக்கு ஜோடியாக பூர்ணிமா ஜெயராம் நடித்திருந்தார். மேலும் படத்தில் சத்தார் வி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இயக்குனர் கவுசி நெருப்பிலே பூத்த மலர் படத்தை இயக்கினார். இந்த படத்தின் கதைப்படி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த சிவக்குமாரும் பூரணிமாவும் காதலிப்பார்கள். ஆனால் இவர்கள் காதலை சிவக்குமாரின் அப்பா ஏற்க மாட்டார். அவர்களை பிரித்து விடுவார்.

மகன் சிவக்குமாரை பாதிரியார் ஆக்கி விடுவார். பல ஆண்டுகளுக்குப் பிறகு பூர்ணிமா ஆசிரியராக பணியாற்றும் பள்ளிக்கு சிவக்குமார் பாதராக செல்லும் நிலையில் அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தின் கிளைமாக்ஸில் சிவக்குமார் ஒரு பெண்ணை கெடுத்து விட்டதாக தவறாக நினைக்கும் அந்த ஊர் மக்கள் அவரை தெருவில் ஓடவிட்டு கல்லால் அடிப்பார்கள்.

- Advertisement -

இந்த படத்தின் பணிகள் முடிந்த நிலையில், சிவக்குமார் தனது நண்பர்களுக்கு படத்தை போட்டு காட்டினார். அந்த சிறப்பு காட்சிக்கு சிவக்குமாரின் மகன்கள் சூர்யாவும் கார்த்தியும் வந்திருந்தனர். அப்போது சூர்யாவுக்கு 8 வயது கார்த்திக்கு 6 வயதாகி இருந்தது. கிளைமாக்ஸில் சிவக்குமார் அடி வாங்குவதை பார்த்த கார்த்தி அப்பாவை அடிக்காதீங்க அப்பாவை அடிக்காதீங்க என்று கதறி அழுதிருக்கிறார். படம் விட்டு வெளியே வந்தும் கூட கார்த்தி அழுகையை நிறுத்தவே இல்லை.

கார்த்திக்கு பிடித்தமான ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தும் அன்று முழுவதும் அப்பாவை அடித்ததை நினைத்தே அவர் அழுதிருக்கிறார். கார்த்திக்கு சினிமா வேறு நிஜம் வேறு என்பதை பின்புதான் புரிந்திருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் 8 வயதான நடிகர் சூர்யா, இது சினிமாதான் அப்பாவை உண்மையாக யாரும் அடிக்கவில்லை என்று தெரிந்து கொண்டு ஜாலியாக அந்த படத்தை பார்த்து ரசித்து இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்