- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரைப் போல முதல்வரும் புதியவர்தானே? அதை பத்தி ஏன் பேசலே? - நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு...

அவரைப் போல முதல்வரும் புதியவர்தானே? அதை பத்தி ஏன் பேசலே? – நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் கிருஷ்ணா!

- Advertisement -

திரைப்பட இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி நடிகர் கிருஷ்ணா தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். கழுகு யாமிருக்க பயமே மாரி 2 கழுகு 2 உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். கௌதம் மேனன் இயக்கிய ஜோஸூவா படத்திலும் பாராசூட் என்ற வெப் சீரிஸிலும் கிருஷ்ணா நடித்திருக்கிறார்.

சமீபத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்றது. இதில் பள்ளி கல்வித்துறை மற்றும் திரைப்படத்துறை சார்ந்த அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டு பதவியேற்றார். இதுகுறித்து தென்னிந்திய சினிமா நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கேள்வி எழுப்பியிருந்தார்.

- Advertisement -

சினிமா துறைக்கு சம்பந்தம் இல்லாத ராஜ்மோகனிடம் எப்படி துறை சார்ந்த பிரச்னைகளை புரிய வைப்பது என்றும், 33 ஆண்டுகளாக சினிமாவில் இருந்த முதல்வர் விஜயே அந்த துறையை தன்வசம் வைத்திருக்கலாம் என்றும் பதிவு ஒன்றில் கூறியிருந்தார்.

இதற்கு நடிகர் அருண் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் எடுக்கும் முடிவுகளில் தலையிட வேண்டாம் என்றும் கண்டித்திருந்தார். இந்நிலையில் நடிகர் கிருஷ்ணாவும் நடிகர் விஷால் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில் நடிகர் கிருஷ்ணா கூறியிருப்பதாவது, நமது முதலமைச்சரும் இந்த பொறுப்புக்கு புதியவர்தான். ஆனால் அந்த விஷயத்தில் மட்டும் உங்களுக்கு ஏன் எந்த கருத்தும் இல்லை? ஒரு பிரச்சனையில் நான் சிக்கிய போது நீங்கள் எப்படி என்னை நட்டாற்றில் கைவிட்டீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கும் என நம்புகிறேன்.

தேர்தல் முடியும் வரை காத்திருங்கள் என்று கூறிய நீங்கள் வெற்றி பெற்ற பிறகு அந்த பிரச்சனையிலிருந்து மெதுவாக விலகிச் சென்று விட்டீர்கள். அதனால் ஒருவரை விமர்சிப்பதற்கு முன்பு அவருக்கு தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ராஜ்மோகனுக்கும் அந்த வாய்ப்பை கொடுப்போம் என்று நடிகர் கிருஷ்ணா அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்