- Advertisement -
Homeபொழுதுபோக்கு2400 ஆண்டுகள் பழமையானது, தமிழ் மன்னர்களின் வீரம் செறிந்த வரலாறு எங்கே? - நடிகர் மாதவன்...

2400 ஆண்டுகள் பழமையானது, தமிழ் மன்னர்களின் வீரம் செறிந்த வரலாறு எங்கே? – நடிகர் மாதவன் ஆவேச கேள்வி!

- Advertisement -

மின்னலே படம் மூலம் தமிழ் சினிமாவில் 1990களில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். ஆரம்பத்தில் சாக்லேட் பாய் என இளம்பெண்களால் அழைக்கப்பட்டவர். தொடர்ந்து என்னவளே ரன் ஜேஜே டும்டும்டும் ஆயுத எழுத்து பிரியமான தோழி கன்னத்தில் முத்தமிட்டால் அலைபாயுதே யாவரும் நலம் நளதமயந்தி லேசா லேசா எதிரி என பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார்.

நடிகர் கமல்ஹாசனுடன் மாதவன் நடித்த அன்பே சிவம் மன்மதன் அம்பு போன்ற படங்கள் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தன. தம்பி ரெண்டு விக்ரம் வேதா ஆர்யா என பல படங்கள் மாதவனுக்கு நல்ல வெற்றியை கொடுத்தன.

தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் மாதவன் பல படங்களில் நடித்தார். ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தை அவரே இயக்கி நடித்தார். மாபெரும் வெற்றிப் படமாக இது அவருக்கு இந்தியில் அடையாளத்தை கொடுத்தது. இப்போது ஜிடி நாயுடு என்ற படத்தில் மாதவன் நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாராவுடன் அவர் நடித்த டெஸ்ட் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம்தான் பாடத்திட்டங்களை வரையறை செய்து புத்தகங்களில் பாடங்களாக தருகிறது. சமீபத்தில் 7ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் டெல்லி சுல்தான்களின் வரலாறு நீக்கப்பட்டது இதற்கு பலத்த எதிர்ப்பும் கிளம்பியது.

இதுகுறித்து நடிகர் மாதவன் தனது கருத்தை கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது, பள்ளியில் வரலாறு படித்தபோது முகலாயர்கள் ஹரப்பா மொகஞ்சாதாரோ நாகரிகங்கள் பிரிட்டிஷ் ஆட்சி சுதந்திரப் போராட்டத்தை பற்றிய பல அத்தியாயங்கள் இருந்தன. ஆனாலும் சேர சோழ பாண்டியர்கள் பற்றி ஒரே ஒரு அத்தியாயமே இருந்தது.

ஆங்கிலேயர்களும் முகலாயர்களும் நம்மை 800 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். ஆனால் சோழ பேரரசு 2400 ஆண்டுகள் பழமையானது. நமது வரலாற்றின் அந்த பகுதி எங்கே, தமிழ் மன்னர்களின் வீரம் சரிந்த வரலாறு எங்கே போனது? உலகின் பழமையான மொழியான தமிழ் பற்றி யாருக்கும் தெரியாது. நமது கலாச்சாரத்தில் மறைந்திருக்கும் அறிவியல் அறிவு தற்போது கேலி செய்யப்பட்டு வருகிறது என்று நடிகர் மாதவன் ஆவேசமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்