- Advertisement -
Homeபொழுதுபோக்குஅழகான பல பெண்களுடன் நான் நடித்திருக்கிறேன், ஆனால் ஒருமுறை கூட அப்படி ஒரு எண்ணம் எனக்கு...

அழகான பல பெண்களுடன் நான் நடித்திருக்கிறேன், ஆனால் ஒருமுறை கூட அப்படி ஒரு எண்ணம் எனக்கு வந்தது இல்லை – நடிகர் மாதவன் ஓபன்டாக்!

- Advertisement -

சினிமா துறையில் நடிகர் நடிகைகள் என்றாலே பெரும்பாலும் அவர்களது திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக தான் இருக்கிறது. முதல் திருமணம் தோல்வியில் முடிந்து சிலர் 2வது 3வது திருமணம் வரை செய்து கொள்கின்றனர். சிலர் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு முரட்டு சிங்கிளாக இருக்கின்றனர். சிலர் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து விடுகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் 2 திருமணம் செய்தும், நடிகை கௌதமியுடன் லிவிங் டு ரிலேஷன்சிப்பில் இருந்தும் இப்போது தனித்து வாழ்கிறார். அதே போல் நடிகர் விஜய் முதல்வரான நிலையில் தனது குடும்பத்தை பிரிந்துள்ளார். அவர்களது விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. அதே போல் தனுஷ் ரவிமோகன் ஜீவி பிரகாஷ்குமார் பிரசாந்த் ராமராஜன் ஏஆர் ரகுமான் என பலரும் திருமண வாழ்வில் இருந்து விடுபட்டு உள்ளனர்.

- Advertisement -

பெரும்பாலான குடும்ப உறவுகளில் நடிகர் நடிகைகளுக்கு பிணக்கு ஏற்பட காரணம் மற்றொரு நடிகர் அல்லது மற்றொரு நடிகையுடன் இருக்கும் திருமணத்தை மீறிய உறவே முக்கிய காரணமாக இருக்கிறது. மனைவி இருந்தாலும் மற்றொரு நடிகை மீது கிரஷ் இருப்பது இன்றைய சினிமா உலகில் மிக சாதாரணமாக மாறி விட்டது.

ஆனால் நடிகர் மாதவன் அந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார். தனது மனைவியை தவிர தன்னுடன் நடிக்கும் நடிகைகளை அவர் பெரியதாக பொருட்படுத்துவதில்லை. நடிகர் மாதவன் ஆரம்பத்தில் சில டிவி சீரியல்களில் மற்றும் விளம்பர படங்களில் நடித்தவர் பிறகு அவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

- Advertisement -

ஆனால் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே சரிதா என்பவரை காதலித்து மாதவன் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் மாதவன் தனது மனைவி குறித்து பேசிய கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த நேர்காணலில் பங்கேற்ற நடிகர் மாதவன் கூறியதாவது, நான் நடித்த படங்களில் பல அழகான நடிகைகளுடன் நடித்திருக்கிறேன்.

ஆனாலும் ஒரு முறை கூட எனது மனைவியை ஏமாற்ற வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. நான் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதாலும் மனைவியை ஏமாற்றிவிட்டு அதன் விளைவுகளை சந்திக்க தயார் இல்லை என்பதாலும் இப்போதும் உண்மையாக இருக்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் கடவுள் எனக்கு ஒரு நல்ல மனைவியை கொடுத்திருக்கிறார். அதுவே எனக்கு போதும் என்று நடிகர் மாதவன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்