தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்தவர் நடிகர் மாதவன். மின்னலே அலை பாயுதே ஆய்த எழுத்து ரன் டும்டும்டும் பிரியமான தோழி நளதமயந்தி அன்பே சிவம் மன்மதன் அம்பு விக்ரம் வேதா இறுதிச்சுற்று எதிரி என பல படங்களில் மாதவன் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இந்தியில் ராக்கெட்ரி என்ற இந்தி படத்தை அவரே இயக்கி நடித்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. பல விருதுகளையும் அள்ளியது. இயக்குனராக மாதவன் பெரிய வரவேற்பை பெற்றார். மேலும் இப்போது கோவையை சேர்ந்த அறிவியல் விஞ்ஞானி ஜிடி நாயுடு பயோபிக் கதையில் மாதவன் டைரக்ட் செய்து அவரே நாயகனாக நடிக்கிறார்.
நடிகர் மாதவனை பொருத்த வரை எப்படிப்பட்ட கேரக்டர் என்றாலும் அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த கூடியவர். அதனால்தான் தனது அன்பே சிவம் மன்மதன் அம்பு படங்களில் கமல் அவரை முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்தார். நளதமயந்தி என்ற படத்தையும் நடிகர் கமல்ஹாசனே தயாரித்து கேமியோ ரோலிலும் நடித்திருந்தார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மாதவன் கூறியதாவது, மணிரத்னம் இயக்கத்தில் ஆய்த எழுத்து படத்தில் நான் இன்பா கேரக்டரில் நடித்தது என் மனைவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நீ யாருன்னே எனக்கு தெரியாம போயிடுச்சு. நீ வீட்டுக்கு உள்ளே வரும்போது வெளியே இன்பாவை விட்டுட்டு வா என்று கூறிவிட்டார்.
ஏனென்றால் அந்த படத்துல மூடுலயே நான் இருப்பேன். அப்போ பார்த்தா மொட்டை அடிச்சிக்கிட்டு வெயிலில் நின்னு நின்னு முகம் கருத்துப் போய் அப்போ ஒரு மிருகம் மாதிரி தான் நான் சுத்தீட்டு இருப்பேன். இந்தபடம் எப்போ முடியும், சீக்கிரமா முடிஞ்சிடணுமா என்று நினைக்கும் போது விவேக் ஓபரா போய் காலை உடைச்சிக்கிட்டான்.
அப்படி கால் உடைஞ்சதால் அவன் கால் ரெடியாக 2 வருஷம் ஆச்சு. அதனால் 2 ஆண்டுகள் நான் அப்படியே அந்த கெட்டப்புலேயே இருக்க வேண்டியதா போச்சு. அப்புறம்தான் நான் எதிரி படத்தில் அந்த லுக்ல நடிச்சிருந்தேன் என்று நடிகர் மாதவன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





