- Advertisement -
Homeபொழுதுபோக்குகுடும்பஸ்தன் நாயகன் மணிகண்டன் இத்தனை படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறாரா? என்ன சொல்றீங்க என்று ஆச்சரியத்தில்...

குடும்பஸ்தன் நாயகன் மணிகண்டன் இத்தனை படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறாரா? என்ன சொல்றீங்க என்று ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருப்பவர் மணிகண்டன். ஆரம்பத்தில் டப்பிங் கலைஞராக இருந்த மணிகண்டன் பிறகு உதவி இயக்குனராகவும் பணிசெய்திருக்கிறார். ஸ்கிரிப் ரைட்டர் மிமிக்ரி கலைஞர் என பல திறமைகளை கொண்டவர் மணிகண்டன்.

ஏலே காதலும் கடந்து போகும் நெற்றிக்கண் காலா உள்ளிட்ட பல படங்களில் மணிகண்டன் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். எனினும் ஜெய்பீம் படம் நடிகர் மணிகண்டனுக்கு நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. பிறகு அவர் நடித்த குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் ஆகிய படங்களும் மாஸ் ஹிட் படங்களாக அமைந்தது.

- Advertisement -

ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டாலே சம்பளத்தை ரூ. 10 கோடி ரூ 15 கோடி என உயர்த்தி வரும் இன்றைய ஹீரோக்களுக்கு மத்தியில் நடிகர் மணிகண்டன் இன்னும் தனது சம்பளம் ரூ. 2 கோடி என்ற அளவில்தான் இருக்கிறார். உதாரணமாக ரூ. 8 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் சூரி, இப்போது ரூ. 15 கோடியாக சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். ஆனால் நடிகர் மணிகண்டன் சென்னையில் ஷூட்டிங் என்றால், ஹெல்மெட் ஒன்றை அணிந்துக்கொண்டு பைக்கில் அவரே வந்து விடுகிறார். 3 ஹிட் படம் கொடுத்தும் சம்பளம் உயரவில்லை.

இப்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தில் நடிகர் மணிகண்டன் இருந்து வருகிறார். வளர்ந்து வரும் நடிகரான மணிகண்டன், நல்ல கேரக்டர்களை நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். அடுத்ததாக இயக்குனர் பா ரஞ்சித்திடம் இணை இயக்குனராக பணிசெய்த சந்தோஷ்குமார் இயக்கத்தில் மக்கள் காவலன் என்ற படத்தில் மணிகண்டன் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

அத்துடன் அவர் மொத்தம் 7 படங்களில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் தேசிங்கு பெரியசாமி கூழாங்கல் கொட்டுக்காளி படங்களின் இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் மற்றும் தியாகராஜா குமாரராஜா ஆகியோர் இயக்கும் படங்களில் மணிகண்டன் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதில் மக்கள் காவலன் படத்தை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி படத்தில்தான் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை குடும்பஸ்தன் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது. அதன்பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய கேரக்டரில் மணிகண்டன் நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறார். இப்படி இதுவரை மொத்தம் 7 படங்களில் மணிகண்டன் நடிக்க கமிட் ஆகியிருந்தாலும் அதுபற்றிய அறிவிப்பு எதுவும் முறையாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்