- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட்நைட் பட நாயகன் மணிகண்டன் தளபதிக்கு சொன்ன கதை - அசந்து போன விஜய் சொன்ன...

குட்நைட் பட நாயகன் மணிகண்டன் தளபதிக்கு சொன்ன கதை – அசந்து போன விஜய் சொன்ன பதில் – அதிரடி முடிவு செய்த மோட்டார் மோகனு!

- Advertisement -

காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். அதற்கு முன்பே இதுவும் கடந்து போகும் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருப்பார். எனினும் காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்ததால் அதிக கவனத்தை பெற்றார்.

தொடர்ந்து ஜெய்பீம் படத்தில் மணிகண்டனின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. தசெ ஞானவேல் இயக்கிய இந்த படத்தில், லாக்கப் கொடூர வன்முறை காட்சிகள், படம் பார்த்த ரசிகர்கள் மனங்களை பதற வைத்தன. அதிலும் மணிகண்டனின் அந்த மரண ஓல காட்சிகள், படம் பார்த்தவர்களை எல்லாம் பதைபதைக்க வைத்துவிட்டது.

- Advertisement -

இந்த படத்தில் வக்கீல் கேரக்டரில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். இந்த படத்தின் கோர்ட் காட்சிகளில் சூர்யா நடிப்பும், உண்மையில் அந்த திருட்டு குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்தில் நடந்தது என்ன, என்று அடுத்தடுத்த கட்டங்களுக்கு அவர் செல்லும் காட்சிகள் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்திருந்தது.

இந்த படத்துக்கு பிறகு மணிகண்டன் மோட்டார் மோகனு கேரக்டரில், குறட்டை பிரச்னையை மையப்படுத்தி குட்நைட் படமும், சமீபத்தில் காதலர்களின் எமோஷனல்களை வெளிப்படுத்திய லவ்வர் படமும் மணிகண்டனுக்கு மிகப்பெரிய பெயரை, தமிழ் சினிமாவில் பெற்றுத் தந்திருக்கிறது. தொடர்ந்து அவரது வளர்ச்சிக்கான பட வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருக்கின்றன.

- Advertisement -

ஆனால் மணிகண்டன் ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டர். படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர். சில படங்களில் உதவி இயக்குனராகவும் நடிகராகவதற்கு முன்பு பணிசெய்த அனுபவம் கொண்டவர். அந்த வகையில், சமீபத்தில் அவர் விஜய் சேதுபதிக்காக ஒரு ஸ்கிரிப்ட் எழுதி வருவதாக தகவல் அடிப்பட்டது. ஆனால் இப்போது வேறோரு தரமான சம்பவம் நடந்துள்ளது.

நடிகர் விஜய் 69 படத்துக்கான ஸ்கிரிப்டை தயார் செய்த நடிகர் மணிகண்டன், நேரடியாக விஜயை சந்தித்து அந்த கதையை சொல்லி இருக்கிறார். ஸ்கிரிப்டையும் காட்டியிருக்கிறார். கதை நன்றாக உள்ளது என்று பாராட்டிய விஜய், இந்த கதையில் இளம் நடிகர் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும். அரசியல் கட்சி துவங்கியிருக்கும் நேரத்தில் இந்த கதை எனக்கு செட் ஆகாது என்று கூறியிருக்கிறார். மேலும் இளம் நடிகர் நடித்தால் இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். இதனால் அந்த கதையில் மணிகண்டனே நடிக்கவும், படத்தை டைரக்ட் செய்யவும் முடிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்