- Advertisement -
Homeபொழுதுபோக்குகிளாடியேட்டர் பட வருமானத்தை நம்பியிருக்கும் தயாரிப்பாளர் அஜீத்குமார் - விஜய் லண்டன் போக பின்னணி காரணம்...

கிளாடியேட்டர் பட வருமானத்தை நம்பியிருக்கும் தயாரிப்பாளர் அஜீத்குமார் – விஜய் லண்டன் போக பின்னணி காரணம் இதுதானா? – வியாபார காந்தம்ன்னு இதை தான் சொல்றாங்களோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் அஜீத்குமாருக்கு கடந்த பல ஆண்டுகளாகவே பெரிய மார்க்கெட் இல்லை. என்றாலும் விஜய் – அஜீத் மோதலை வைத்து அவரது படங்களும் ஏதோ சுமாரான வசூலை தந்துக்கொண்டு இருந்தது. அஜீத்குமார் நடித்த 50வது படம் மங்காத்தாவுக்கு பிறகு இதுதான் அஜீத்குமாரின் உண்மையான சினிமா வியாபார நிலவரமாக இருந்தது.

இந்த நிலையில் எதிராளியாக இருந்த விஜயும் அரசியல் களத்துக்கு போய் முதல்வராகி விட்டார். அஜீத்குமாருக்கு அவர் கேட்கிற சம்பளம் தந்து படம் எடுக்கிற தயாரிப்பாளர் யாரும் இல்லை. ரூ. 185 கோடி சம்பளம் கேட்கும் அஜீத்குமாரின் சினிமா வியாபாரமே ரூ. 175 கோடிதான் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் ஏகே 64 என்கிற அவரது அடுத்த படத்தை அதாவது டேர்டெவில் என்ற படத்தை தனது மனைவி ஷாலினி பெயரில் சொந்தமாக தயாரிக்க அஜீத்குமார் முன்வந்தார். ஆனால் அந்த படத்தை தயாரிக்க கையில் பணம் இல்லை. கார் ரேஸ் பைக் ரேஸ் என ஏகப்பட்ட பணம் அதில் போய்விட்டது.

அதனால் கிளாடியேட்டர் என்ற டாகுமென்ட்ரி படத்தின் வருமானத்தை வைத்து டேர் டெவில் படத்தை தயாரிக்க அஜீத்குமார் திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு விளம்பர யுக்தியாக தான் சிம்பு நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜீவி பிரகாஷ்குமார் என பல நட்சத்திர நடிகர்கள் இயக்குனர்கள் துபாய்க்கு அஜீத்குமார் மூலம் வரவழைக்கப்பட்டு அந்த கிளாடியேட்டர் ஆவணப்படத்தில் அவர்களது பேட்டிகளும் இடம்பெற்றன.

- Advertisement -

இதன் தொடர்ச்சியாக தான் இப்போது நடிகரும் தமிழக முதல்வருமான விஜயை லண்டன் வரவழைத்து அவருடன் எடுத்த வீடியோ காட்சிகளை கிளாடியேட்டர் படத்தில் இணைத்து டிஜிட்டல் சாட்டிலைட் வியாபாரம் மூலமும் பெரிய தொகை பார்க்கவும், தியேட்டர்களில் கிளாடியேட்டர் ஆவணப் படத்தை ரிலீஸ் செய்வதன் மூலமும் கணிசமான வருவாயை அள்ளி அஜீத்குமார் திட்டமிட்டுள்ளார்.

ஏனெனில் விஜய் இருந்தால் கிளாடியேட்டர் படத்தை விஜய் ரசிகர்களும் பார்ப்பார்கள் என்று அஜீத்குமார் கணக்கு போட்டிருக்கிறார். ஆனால் அந்த படத்தை அஜீத் ரசிகர்களே பார்க்க மாட்டார்கள். அந்தளவுக்கு அஜீத்குமார் மீது அவர்கள் பயங்கர கடுப்பில் இருந்து வருகின்றனர் என்பதும் இதில் கவனிக்கத்தக்கது. ஆக மொத்தம் தனது சுயலாபத்துக்காக விஜயை லண்டனுக்கு அஜீத்குமார் வரவழைத்த உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்