- Advertisement -
Homeபொழுதுபோக்குலப்பர் பந்து பட இயக்குனர் டைரக்‌ஷனில் தனுஷ் நடிக்கும் படம் - டைட்டில் இதுதான், இப்பவே...

லப்பர் பந்து பட இயக்குனர் டைரக்‌ஷனில் தனுஷ் நடிக்கும் படம் – டைட்டில் இதுதான், இப்பவே இது ஏ படம்தான்னு சொல்றாங்களே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் குறிஞ்சி பூ போல அவ்வப்போது நல்ல கதை அம்சம் கொண்ட சமூக அக்கறை கொண்ட சில படங்கள் வெளியாகின்றன. அந்த வரிசையில் காக்கா முட்டை குட்நைட் குடும்பஸ்தன் லப்பர் பந்து சிறை பார்க்கிங் டூரிஸ்ட் ஃபேமிலி சிறை போன்ற படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இதில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் லோக்கல் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி ஊருக்குள் இருக்கும் சாதிய வேறுபாடுகளை அழுத்தமாக ஒரு நல்ல படைப்பாக சமூக அக்கறையை வெளிப்படுத்திய ஒரு படமாக அது இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் லப்பர் பந்து படத்துக்கு பிறகு 2 ஆண்டுகள் கழிந்த நிலையில் தனது 2வது படத்தை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து டைரக்ட் செய்ய உள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். மதுரை கதைக்களத்தில் இந்த படம் உருவாகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க ரத்தக்களறியாக வன்முறை காட்சிகள் நிறைந்த ஒரு படமாக அப்படிப்பட்ட ஒரு கதைக்களத்தில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் வன்முறை காட்சிகளில் சிறிதும் குறை இருக்க கூடாது என்று நடிகர் தனுஷ், இயக்குனரிடம் கட் அண்ட் ரைட்டாக சொல்லி விடடாராம்.

- Advertisement -

அதனால் இந்த படத்தில் வன்முறை காட்சிகள் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் படம் முழுவதும் இருக்க போகிறது. அதனால் இது ஏ படம் என்று இப்போதே படக்குழு முடிவு செய்துவிட்டது. மேலும் இந்த படத்துக்கு படையல் என டைட்டில் வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை நடிகர் தனுஷே தனது வுண்டர்ஃபார் பிலிம்ஸ் ஸ்டுடியோ சார்பில் சொந்தமாக தயாரிப்பார் என்றும் தெரிய வந்துள்ளது.

லப்பர் பந்து போன்ற ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படத்தை தந்த தமிழரசன் பச்சமுத்து, வன்முறை கதைக்களம் கொண்ட ஒரு படத்தை இயக்கப் போகிறார். புஷ்பா அல்லது டாக்சிக் கேப்டன் மில்லர் ராயன் போன்ற ஒரு படமாக அது இருக்கும் பட்சத்தில் கமர்ஷியல் ஆக்சன் ஹீரோவாக தனுஷ் ஜெயித்து விடுவார். ஆனால் ஒரு நல்ல படைப்பாளியாக அங்கு இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து தோற்று விடுவார் என்பதே கசப்பான உண்மை.

- Advertisement -

சற்று முன்