- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவுல ஒரு தப்பு பண்ணாலும் முடிஞ்சே போச்சு... அவுட் டேட்டட் ஆயிருவோம்... கள நிலவரத்தை மௌனமாக...

சினிமாவுல ஒரு தப்பு பண்ணாலும் முடிஞ்சே போச்சு… அவுட் டேட்டட் ஆயிருவோம்… கள நிலவரத்தை மௌனமாக கூறிய இளம் நடிகர் மணிகண்டன்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார் மணிகண்டன். ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்து வந்த அவர் அங்கிருந்து, கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களில் வர ஆரம்பித்தார். இதில் விக்ரம் வேதா அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அந்த திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாக செயல்பட்டு பலரது பாராட்டையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து காலா, ஜெய் பீம் எனக் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன. இப்படியான சூழலில் தான் குட் நைட் திரைப்படம் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமானார்.

- Advertisement -

மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞனுக்கு, குறட்டை எந்த வடிவில் பிரச்சனையாக மாறுகிறது என்பதை மையப்படுத்தி தான் இதன் திரைக்கதை எழுதப்பட்டிருந்தது.

தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத களத்தை மிகவும் சுவாரசியமாக கொடுத்திருந்ததால் குட் நைட் திரைப்படத்திற்கு பலரும் பச்சைக்கொடி காட்டினர். படத்தில் இடம்பெற்ற ரமேஷ் திலக் உட்பட அனைவரும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்ததால் குட் நைட் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இதனைத் தொடர்ந்து மணிகண்டன், லவ்வர் திரைப்படத்தில் நடித்தார்.

- Advertisement -

2கே கிட்ஸ்களை டார்கெட் செய்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அதனை முழுமையாக முடித்து வெற்றி கொடியை நாட்டியது. இப்படி அடுத்தடுத்த இரண்டு திரைப்படங்கள் மிகவும் குறைந்த பட்சத்தில் எடுக்கப்பட்டு மணிகண்டனுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தன. இப்படியான சூழலில் தான் அவர் தற்போது குடும்பஸ்தன் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய மணிகண்டன், இந்த சினிமா துறையில் தொடர்ந்து வெற்றிகள் கொடுத்தால் மட்டும்தான் நாம் நீடிக்க முடியும். இங்கு ஒரு தோல்வி கொடுத்தாலும் நாம் போய் விடுவோம். அதன் பிறகு நாம் வர முயற்சித்தாலும், நம்மை அவுட் டேட்டட் என்று கூறி விடுவார்கள். இதனால் குட் நைட், லவ்வர் படங்களைத் தொடர்ந்து குடும்பஸ்தன் திரைப்படத்திலும் வெற்றியை வழங்க கூடிய நிலையில் நான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்