- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்முறையாக உடைகிறதா வெங்கட் பிரபு யுவன் சங்கர் ராஜா கூட்டணி... சிவகார்த்திகேயன் படத்திற்காக எடுத்த முடிவு......

முதல்முறையாக உடைகிறதா வெங்கட் பிரபு யுவன் சங்கர் ராஜா கூட்டணி… சிவகார்த்திகேயன் படத்திற்காக எடுத்த முடிவு… சரி அது என்ன கதைன்னு தெரியுமா…

- Advertisement -

சிவகார்த்திகேயனுக்கு தற்போது கைவசம் இரண்டு திரைப்படங்கள் இருக்கின்றன. இதில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி திரைப்படத்தில் அவர் நடித்து முடித்து விட்டார். செப்டம்பர் 5ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மனநலம் குன்றிய இளைஞர் கதாபாத்திரத்தில் வருகிறார் சிவகார்த்திகேயன்.

படத்தில் ருக்மணி வசந்த், விக்ராந்த், பிஜு மேனன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். நிச்சயமாக இது ஏ ஆர் முருகதாஸுக்கு திருப்பு முனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இதன் சூட்டிங் பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

- Advertisement -

சுதா கொங்கரா இயக்கியிருக்கும் அதர்வா, ஸ்ரீ லீலா, ரவி மோகன் உள்ளிட்டோர் இடம் பெற்று இருக்கிறார்கள். இறுதியாக இலங்கையில் இதன் சூட்டிங் நடத்தப்பட்டது. பிறகு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இதன் சூட்டிங் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இதனால் தனது அடுத்த அடுத்த திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே குட் நைட் பட இயக்குனர் விநாயகர் சந்திரசேகர் உடன் சிவகார்த்திகேயன் இணைவதாக இருந்தது. அதில் சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக மோகன்லால் நடிக்க இருப்பதாக கூறினார்கள். ஆனால் அவருக்கு கால் சீட் கிடைக்க தாமதம் ஏற்படும் என்பதால் இதன் படப்பிடிப்பை ஒத்தி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

அதே சமயத்தில் விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் காயத்திரியுடனும் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக ஒரு தகவல் கசிந்து இருக்கிறது. இதற்கான கதை விவாதம் இறுதி கட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் போது அவர் அடுத்ததாக வெங்கட் பிரபு உடன் இணைவார் என்று பேசினார்கள். அதை அண்மையில் இயக்குனரே உறுதிப்படுத்தினார்.

இந்த திரைப்படம் சயின்ஸ் பிக்சன் தொடர்பான கதைக்களம் என்று கூறப்படுகிறது. இத்தனை நாட்கள் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணிபுரிந்த வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்திற்காக அனிருத்துடன் இணைய இருப்பதாக பேசப்படுகிறது. அதுமட்டுமல்ல அக்டோபர் மாதம் இதன் சூட்டிங் தொடங்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசுகிறார்கள்.

- Advertisement -

சற்று முன்