- Advertisement -
Homeபொழுதுபோக்குநடு இரவு 2 மணி, ராகவா லாரன்ஸின் வீட்டுக் கதவை தட்டும் சத்தம், திறந்துப் பார்த்ததும்...

நடு இரவு 2 மணி, ராகவா லாரன்ஸின் வீட்டுக் கதவை தட்டும் சத்தம், திறந்துப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த நடிகர், அன்னைக்கு அவர் கத்துக்கிட்ட பாடம் இதுதான்

- Advertisement -

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் டான்ஸ் மாஸ்டராக கொடி கட்டி பறக்கும் ராகவா லாரன்ஸ், தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அதே போல் “முனி”, “காஞ்சனா” வரிசையில் பல திரைப்படங்களையும் இயக்கி அதில் நடித்தும் வருகிறார்.

இதனை தொடர்ந்து தற்போது “சந்திரமுகி 2” திரைப்படத்தில் நடித்துள்ளார் ராகவா லாரன்ஸ். ரஜினிகாந்த் நடித்த “சந்திரமுகி” திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி திரையரங்குகளில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

- Advertisement -

இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடித்துள்ள “சந்திரமுகி 2” திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. “சந்திரமுகி” திரைப்படத்தை இயக்கிய பி.வாசு இத்திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

ராகவா லாரன்ஸ் நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் என்பதையும் தாண்டி அவர் பல ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார். அதே போல் பல மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பெரும் உதவியாக நிற்கிறார். இவ்வாறு தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் பலர் வாழ்வில் ஒளியாக இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

- Advertisement -

இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் ராகவா லாரன்ஸ் குறித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது பல வருடங்களுக்கு முன்பு ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் சிறு வயது மகன் ஆகியோர் நடு இரவு 2 மணிக்கு ராகவா லாரன்ஸின் வீட்டுக் கதவை தட்டியிருக்கின்றனர். வீட்டு காவலாளி ராகவா லாரன்ஸிடம் இந்த விஷயத்தை தெரியபடுத்த, என்ன, ஏது என்ற பதட்டத்துடன் ராகவா லாரன்ஸ் அவர்களை பார்க்க வந்துள்ளார்.

அந்த குடும்பத்தினரை வீட்டிற்குள் அழைத்த ராகவா லாரன்ஸ் என்ன விஷயம் என்று கேட்டபோது, அந்த சிறுவனின் தந்தை அழத்தொடங்கிவிட்டாராம். “எதற்காக அழுகிறீர்கள்?” என கேட்க, அதற்கு அந்த தந்தை, தனது மகனை காட்டி, “இவனுக்கு இறுதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு பெரும் தொகை செலவாகும் என கூறுகிறார்கள். அந்தளவுக்கு தொகை இல்லைங்க சார்” என்று கூறியிருக்கிறார்.

உடனே ராகவா லாரன்ஸ், “கவலைப்படாதீர்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறியபோது அந்த தந்தை ராகவா லாரன்ஸின் காலில் விழப்போனாராம். அவரை தடுத்தார் ராகவா லாரன்ஸ், அதன் பின் மீண்டும் காலில் விழப்போனாராம். அப்போதும் தடுத்தாராம் ராகவா லாரன்ஸ்.

தந்தை ஒவ்வொரு முறை காலில் விழப்போனபோது, அந்த சிறுவன் அதனை பார்த்து ஓவென அழுதானாம். அதில் இருந்து ராகவா லாரன்ஸ் ஒரு விஷயத்தை புரிந்துகொண்டாராம். அதாவது எந்த தந்தையும் தனது பிள்ளைகளின் முன்பு அவமானப்படுவதை எந்த பிள்ளையும் விரும்புவதில்லை என்பதை புரிந்துகொண்டாராம். அதன் பின் தன்னிடம் உதவி கேட்க வருபவர்களின் கால்களில் விழ கூட தயாரானாராம் ராகவா லாரன்ஸ். அந்த அளவுக்கு அவருக்கு மன மாற்றம் ஏற்பட்டிருந்ததாம்.

 

- Advertisement -

சற்று முன்