- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அழைக்காமல் திருமணத்துக்கு வந்த நடிகர், கடைசியில் செய்ததுதான் ஹைலைட் - உண்மையை போட்டுடைத்த நடிகர்...

நான் அழைக்காமல் திருமணத்துக்கு வந்த நடிகர், கடைசியில் செய்ததுதான் ஹைலைட் – உண்மையை போட்டுடைத்த நடிகர் மணிகண்டன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் அதிக கவனம் பெற்ற நடிகராக வளர்ந்து வருபவர் மணிகண்டன். காதலும் கடந்து போகும் காலா ஜெய்பீம் நெற்றிக்கண் குட்நைட் லவ்வர் ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது வெளிவந்துள்ள படம் குடும்பஸ்தன். இந்த படம் பாசிடிவ் விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்று வருகிறது.

சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்பு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் டப்பிங் ரைட்டர் ஸ்கிரிப்ட் ரைட்டர் உதவி இயக்குனர் என பல நிலைகளில் இருந்தவர். பா ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்த மணிகண்டன், அதிக கவனம் பெற்றார். அடுத்து ஜெய்பீம் படத்தில் அவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது.

குட்நைட் படத்தில் குறட்டை பிரச்னை உள்ள மோட்டார் மோகனாக மணிகண்டனின் நடிப்பு, ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. லவ்வர் படத்தை தொடர்ந்து குடும்பஸ்தன் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நடிகர் மணிகண்டன் ஒரு நேர்காணலில் நடிகர் விஜய் சேதுபதி குறித்து பேசியிருக்கிறார்.

அதில் நடிகர் மணிகண்டன் கூறியதாவது, காதலும் கடந்து போகும் படத்தின் ஷூட்டிங்கில்தான் நடிகர் விஜய் சேதுபதியை முதன் முதலாக நான் சந்தித்தேன். அப்போது ஒரு நாள் நான் அவரிடம், இதற்கு முன் நான் பணியாற்றிய இடங்கள், சேனல்கள் பற்றி எல்லாம் சொன்னேன். அதன்பிறகு அப்படியே எங்களுக்குள் ஒரு நட்பு ஏற்பட்டது.

என் தங்கைக்கு சின்ன அறுவைச் சிகிச்சை நடந்தது. அப்போது விஜய் சேதுபதி நேரில் வந்து பார்த்தார். என் தங்கை திருமணத்திற்கு நான் அவரை முறைப்படி பத்திரிக்கை வைத்து அழைக்கவே இல்லை. ஆனால் என் தங்கச்சிக்கு திருமணம் என்று அவருக்கு தெரியும். திருமண நாளன்று எனக்கு போன் செய்து மண்டபத்தில் 20 நிமிடம் மட்டும் காத்திருக்கச் சொல் என்று சொன்னார். அடுத்த 20 நிமிடங்களுக்குள் அவர் மண்டபத்திற்கு வந்துவிட்டார்.

என்னுடைய அம்மா அப்பாவிடம் பேசிவிட்டு, கவலைப்படாதீங்க உங்க பையன் நல்லா வருவான் என்று விஜய் சேதுபதி சொன்னார். பிறகு 3 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு சென்றார். அவர் அந்த பணம் கொடுக்காமல் இருந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என்றே தெரியாது. நான் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் நடிகர் மணிகண்டன் கூறி இருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

சற்று முன்