- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்க வீடு கிரஹப் பிரவேசம் நடந்த பிறகு, என் அப்பா சொன்ன அந்த வார்த்தைகள்...

எங்க வீடு கிரஹப் பிரவேசம் நடந்த பிறகு, என் அப்பா சொன்ன அந்த வார்த்தைகள் …. – நெகிழ்ந்து போய் பேசிய நடிகர் மணிகண்டன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை மணிகண்டன் பெற்று வருகிறார். காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மகனாக அவரது நடிப்பு அதிக வரவேற்பை பெற்றது, தொடர்ந்து ஜெய்பீம் படத்தில் மணிகண்டன் நடிப்பு வேற லெவலில் இருந்தது. அடுத்து குட்நைட் லவ்வர் படங்களை தொடர்ந்து குடும்பஸ்தன் படமும் மணிகண்டனுக்கு பெரிய வெற்றியை தந்திருக்கிறது.

நடிகர் மணிகண்டன் தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்துவரும் நிலையிலும் இயல்பான மனிதராக அந்த வெற்றியால் தனது இயல்பு மாறாதபடி நடந்துக்கொள்கிறார் என்பது பலரிடமும் பாராட்டை பெற்று வருகிறது. இன்னும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தனது பைக்கில்தான் வருகிறார். ஒரே ஒரு மேக்கப் அசிஸ்டென்டும் மட்டுமே அவருடன் வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் மணிகண்டன் ஆரம்பத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்தவர். பிறகு டப்பிங் ஸ்கிரிப்ட் எழுதிய அவர், சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும் பணி செய்திருக்கிறார். குறிப்பாக மணிகண்டன் மிமிக்ரி கலைஞராக இருக்கிறார். ரஜினி கமல் ஜனகராஜ் சிவக்குமார் விஜய் சேதுபதி என யாருடைய குரலிலும் அவர் மிக சிறப்பாக மிமிக்ரி பேசி அசத்தி வருகிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் மணிகண்டன் கூறியதாவது, எங்க வீடு கிரகப்பிரவேசம் பண்ணி இருந்தோம். அப்போ என் அப்பா என் பிரண்ட்ஸ்கிட்ட இப்படிதான் சொன்னார். நான் இவனை பெத்தேன் படிக்க வைத்தேன் அவ்வளவுதான். மீதி எல்லாம் நீங்கதான் பார்த்துக்கிறீங்க, அவனைப் பார்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டார்.

- Advertisement -

அது எந்த அளவுக்கு உண்மை என்றால் என்னுடைய கேரியர் செலக்சன்ல இருந்து. சினிமாவுக்கு நான் தகுதியானவனா என்று நான் நினைக்கும் போதெல்லாம், ரொம்ப போலியாக ட்ரை பண்ணினால் உனக்கு வரும் என்று சொல்லாமல், இல்லை உனக்கு வரவில்லை நீ நிறைய கத்துக்கணும் என்று சொல்லி என் பிரண்ட்ஸ்தான் என்னை மோட்டிவேட் பண்ணுனாங்க.

அதே மாதிரி நான் நடுவுல ஒரு நாலஞ்சு வருஷம் எங்க வீட்ல சுத்தமா காசு வாங்க கூடாது என்ற முடிவு பண்ணிட்டேன். அப்போ எனக்கு வேலை கூட இல்லை. அப்போ அந்த நாலு வருஷமும் என்னுடைய பிரண்ட்ஸ் பிரவீன் மற்றும் ராகேந்து தான் தினமும் காசு கொடுப்பாங்க என்று நடிகர் மணிகண்டன் நெகிழ்ச்சியாக கூறி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்