- Advertisement -
Homeபொழுதுபோக்குஎந்த நம்பிக்கையில் இந்த கேரக்டர்ல என்னை நடிக்க சொல்றீங்க? ரஜினி பட டைரக்டரிடம் நேரடியாக கேட்ட...

எந்த நம்பிக்கையில் இந்த கேரக்டர்ல என்னை நடிக்க சொல்றீங்க? ரஜினி பட டைரக்டரிடம் நேரடியாக கேட்ட நடிகர் மணிகண்டன் – அவரே சொன்ன தகவல் இது!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது இளம் நடிகர்கள் இளம் இயக்குனர்கள் படங்கள் பெரிய வெற்றியை பெறுவது தமிழ் சினிமாவின் எதிர்காலம் ஆரோக்கியமாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. வழக்கமாக பிரமாண்டம், கமர்ஷியலை நம்பாமல் நல்ல கதைகளை கையில் எடுக்கும் இயக்குனர்கள் ஜெயிப்பது நல்ல முன்னேற்றத்தின் அறிகுறியாக உள்ளது.

அந்த வகையில் இளம் நடிகர்கள் ஹரீஷ் கல்யாண் பிரதீப் ரங்கநாதன் சிவகார்த்திகேயன் மணிகண்டன் போன்றவர்கள் நடிப்பில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. அதிலும் லப்பர் பந்து பார்க்கிங் லவ் டுடே டிராகன் அமரன் குட்நைட் குடும்பஸ்தன் என நல்ல கதையுள்ள படங்கள் ஜெயிக்கின்றன.

- Advertisement -

டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆகவும் இருந்த மணிகண்டன் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறியிருக்கிறார். ஜெய்பீம் காலா குட்நைட் லவ்வர் படங்களை தொடர்ந்து சமீபத்தில் புதுமுக இயக்குனர் ராஜேஸ்வரி காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் படம் மாபெரும் வரவேற்பை, வெற்றியை பெற்றிருக்கிறது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் மணிகண்டன் கூறியதாவது, நான் எதையுமே பிளான் பண்ணி செய்யவில்லை. ஜெய்பீம் படத்தில் நான் நடிக்கப் போகவில்லை. என்னை எழுத தான் கூப்பிட்டிருந்தனர். அதற்குதான் போனேன். நான் எழுதி முடிச்சிட்டேன். கடைசியில் கிளைமாக்ஸ் சீனுக்காக ஒர்க் பண்றோம். சரிங்க சார், நல்லா ஒர்க் பண்ணுங்க, சூப்பரா வந்துருக்குன்னு சொல்லிட்டு நான் கிளம்பறப்போ டைரக்டர் சொன்னார்.

- Advertisement -

என்கிட்ட ராஜாக்கண்ணு கேரக்டர் எப்படி இருக்குன்னு கேட்டார். சூப்பரா இருக்கு சார் என்றேன். யார் பண்ணினா நல்லா இருக்கும் என்றார். நான் நான்கைந்து நடிகர்கள் பெயரை சொன்னேன். அப்போ இது உங்களுக்கு ஓகே வா என்றார். நான் அப்படியா என திகைத்து போய்விட்டேன். பதிலுக்கு நான் அவரிடம், நான் பண்றது உங்களுக்கு ஓகேவா என்று திருப்பிக் கேட்டேன்.

ஏனென்றால் காலா படத்துக்கு முன்வரை நான் பண்ணியது எல்லாமே சின்ன சின்ன வேஷங்கள்தான். காலா படத்தில் நடித்த போது எனக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேரக்டர் கொடுத்தது இயக்குனர் பா ரஞ்சித் தான். எந்த நம்பிக்கையில் இவ்வளவு பெரிய கேரக்டர் எனக்கு கொடுக்கறீங்கன்னு நானே அவர்கிட்ட கேட்டேன், என்று அந்த நேர்காணலில் நடிகர் மணிகண்டன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்