- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தை வரவிடாமல் தடுப்பது ஏன்? படைப்பாளிகளுக்கு சுதந்திரமே இனி இல்லையா? - நடிகர் மன்சூர்...

ஜனநாயகன் படத்தை வரவிடாமல் தடுப்பது ஏன்? படைப்பாளிகளுக்கு சுதந்திரமே இனி இல்லையா? – நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசம்!

- Advertisement -

நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நடித்த கருப்பு பல்சர் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும் ரேஷ்மா வெங்கடேஷ் மதுனிகா மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களின் நடித்துள்ளனர். கருப்பு பல்சர் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் மன்சூர் அலிகான் ஜனநாயகன் படம் குறித்து ஆவேசமாக பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் பேசியதாவது, ஒரு திரைப்படம் எடுப்பது என்பது ஒரு படைப்பாளியின் சுதந்திரம். ஆனால் இப்போது அந்த சுதந்திரம் பறிபோய் விட்டது. படைப்பாளிகள் நசுக்கப்படுகின்றனர். மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தும் படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை வெளியிட முடியாமல் தணிக்கை வாரியம் குறுக்கீடு செய்வது எந்த வகையில் நியாயம்? மத்திய அரசு ஏன் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்கிறது? ஒரு படத்தை நம்பி பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அந்த படத்துக்கு முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இதை பற்றி எல்லாம் ஏன் தணிக்கை வாரியம் யோசிக்க மறுக்கிறது? ஜனநாயகன் படத்தை பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனால் பொங்கல் பண்டிகைக்கு அந்த படத்தை வரவிடாமல் செய்து விட்டார்கள். இப்போது அந்த படத்தை வெளியிடவே கூடாது என்கிற வகையில் தணிக்கை வாரிய அதிகாரிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.

- Advertisement -

தணிக்கை வாரியத்தின் இந்த செயல் அப்பட்டமான தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் போக்காக உள்ளது. மத்திய அரசும் இதற்கு துணை நிற்கிறது. நாட்டில் எவ்வளவோ அத்துமீறல்கள் அடக்குமுறைகள் மக்கள் பிரச்சனைகள் இருக்கும்போது ஒரு துளி கூட கண்டுகொள்ளாத மத்திய அரசு இதுபோன்ற பிரச்சனைகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பது பயமாக உள்ளது. இப்படி சென்றால் படைப்பாளியின் சுதந்திரம் என்னாகும்? அதை நினைத்தாலே வேதனையாக இருக்கிறது.

நான் என் மனதில் பட்டதை தைரியமாக சொல்வேன். எந்த இடத்திலும் பயமில்லாமல் பேசுவேன். எனக்கு யார் குறித்தும் கவலை இல்லை. சினிமா உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதே போக்கு தொடர்ந்தால் படங்கள் இனி சுதந்திரமாக வெளிவரவே முடியாது. என்னை கேட்டால் தணிக்கை வாரியம் எதற்கு என்றுதான் கேட்பேன். நல்ல படத்தை மக்கள் மதிப்பீடு செய்து சான்று அளித்தால் போதும். எதற்கு தணிக்கை வாரியம் வேண்டும்? என்று நடிகர் நன்சூர் அலிகான் ஆவேசமாக அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்