இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டில் வெளியான சிங்கம் 2 படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு சூர்யா நடித்த படங்களில் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய 2 படங்களும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகி வணிக ரீதியான வெற்றியை பெற்றன.
ஆனால் தியேட்டரில் வெளியான பசங்க 2 என்ஜிகே அஞ்சான் காப்பான் 24 சிங்கம் 3 எதற்கும் துணிந்தவன் மாசு என்கிற மாசிலாமணி கங்குவா போன்ற படங்கள் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தன. அதுவும் கங்குவா படம் மிகவும் சொதப்பலான ஒரு படமாக விமர்சிக்கப்பட்டது. அதன்பிறகு வெளியான ரெட்ரோ படமும் பெரிய வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு படம் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. முதன் முறையாக நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் 340 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. அவரது திரை பயணத்தில் மிகவும் திருப்புமுனையாக கருப்பு படம் அமைந்தது.
இதைத் தொடர்ந்து வருகிற 14ம் தேதி நடிகர் சூர்யா மமிதா பைஜூ நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் ரிலீஸாக உள்ளது. லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதே போல் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்த படமும் தீபாவளிக்கு வெளிவர உள்ளது.
இந்த 2026ம் ஆண்டில் கருப்பு படத்தை தொடர்ந்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் அதன்பிறகு தீபாவளிக்கு ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்த படமும் ரிலீஸ் என ஒரே ஆண்டில் 3 படங்கள் சூர்யாவுக்கு வெளியாகின்றன. கடந்த 2002ம் ஆண்டில் இப்படி ஒரே ஆண்டில் 3 படங்களை சூர்யா தந்திருக்கிறார்.
அதே போல் கடந்த 2005ம் ஆண்டிலும் இதே போல் ஒரே ஆண்டில் 3 படங்களில் சூர்யா நடித்து வெளியாகி உள்ளது. இப்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டில் நடிகர் சூர்யாவின் 3 படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன. தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் பல ஆண்டுகளாகவே இப்படி முன்னணி ஹீரோக்கள் ஆண்டுக்கு 3 படங்கள் தர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அந்த வரிசையில் சூர்யாவை தொடர்ந்து மற்ற முன்னணி ஹீரோக்களும் இதே ஃபார்மூலாவுக்கு அவர்களும் மாற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.





