- Advertisement -
Homeபொழுதுபோக்குதயாரிப்பாளராக களத்தில் குதித்த நடிகர் அஜீத்குமார், 100 கோடி ரூபாய் சம்பளம் கூட கிடைக்காதா? அட...

தயாரிப்பாளராக களத்தில் குதித்த நடிகர் அஜீத்குமார், 100 கோடி ரூபாய் சம்பளம் கூட கிடைக்காதா? அட இந்த விஷயம் அவருக்கு தெரியவே தெரியாதா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படம் வெளியாகி 1.5 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது நடிப்பில் அடுத்த படம் ஷூட்டிங் இன்னும் துவங்கப்படவில்லை. ஏகே 64 என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டு ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்‌ஷன் அனிருத் இசை என்று கமிட் ஆன நிலையில் தயாரிப்பாளர் யாருமே படத்தை தயாரிக்க முன்வரவில்லை.

இந்த நிலையில் இப்போது நடிகர் அஜீத்குமார் தனது மனைவி ஷாலினி பெயரில் இந்த படத்தை அவரே சொந்தமாக தயாரிக்கிறார். டேர் டெவில் என இந்த படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் துவக்கத்தில் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தயாரிப்பாளர் ஆன நிலையில் அதுபற்றி மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, அஜீத்குமாரின் சினிமா வியாபாரம் 225 கோடி ரூபாய் என ஏற்கனவே சொல்லியிருந்தோம். அவர் அதில் 185 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டதால் தான் யாரும் அவரது 64வது படத்தை தயாரிக்க முன்வரவில்லை.

ஆனால் இப்போதைய சூழ்நிலையில் அஜீத்குமாரின் சினிமா வியாபாரம் ரூ. 175 கோடியாக குறைந்துள்ளது. அதனால் அவர் நடிக்கும் படத்தின் மேக்கிங் செலவு இயக்குனர் இசையமைப்பாளர் சக நடிகர்கள் உள்ளிட்டோர் சம்பளம் என 75 கோடி ரூபாய்க்கும் அடங்கினால் அவருக்கு 100 கோடி ரூபாய் சம்பளமாக கிடைக்கும். இன்னும் தயாரிப்பு செலவு அதிகமானால் அவரது சம்பளம் குறையும். இதில் அனிருத் சம்பளமே 15 கோடி ரூபாய் போய்விடும்.

- Advertisement -

நடிகர் அஜீத்குமாருக்கு கேரளாவில் ரூ. 2 கோடி வரைதான் வியாபாரம் உள்ளது. அவரது குட்பேட் அக்லி படம் 1.80 கோடிதான் ஷேர் தந்திருக்கிறது. தமிழ்நாட்டில் 60 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஆந்திராவில் அஜீத்குமாருக்கு ஜீரோ வியாபாரம்தான். அங்கு அவருக்கு சிறிதும் பிஸினஸ் இல்லை. அதனால் அஜீத்குமார் தயாரிப்பாளராகி களத்தில் நிற்கும்போதுதான் இந்த உண்மைகள் தெரிய வரும் என்று பிஸ்மி கூறியிருக்கிறார்.

நடிகர் அஜீத்குமாரின் சினிமா வியாபாரம் இந்த சரிவான இமேஜில் உள்ள நிலையில் அவர் சொந்தமாக படம் தயாரிப்பது என்பது மிகவும் ரிஸ்க் ஆனது. பேசாமல் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு பிற தயாரிப்பு நிறுவனங்களில் நடித்தால் நஷ்டம் ஏற்படாது. விஜயும் களத்தில் இல்லாத நிலையில் அஜீத்குமார் சுதாரித்துக் கொள்ள வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்