- Advertisement -
Homeபொழுதுபோக்குகைதி படம் முதல்ல எனக்குதான் வந்துச்சு... ஆனா இந்த ஒரே காரணத்தினால் நடிக்க முடியாமல் போனது......

கைதி படம் முதல்ல எனக்குதான் வந்துச்சு… ஆனா இந்த ஒரே காரணத்தினால் நடிக்க முடியாமல் போனது… மனம் திறந்த மன்சூர் அலிகான்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் இன்று மிக முக்கியமான இயக்குனர்கள் பட்டியலில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் எனும் திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், தனது முதல் படத்திலிருந்து பலராலும் வியந்து பாராட்டப்பட்டார். நான்கு பேரையும், அவர்கள் பின்னணியில் சுற்றி நடக்கும் கதையையும் ஒரே இரவில் விறுவிறுப்பாக கூறி ரசிகர்களிடம் கைத்தட்டல்களை பெற்றார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் மாநகரம் பாணியில் ஒரே இரவில் நடக்கும் கதையாக கைதி படத்தை கையில் எடுத்தார் லோகேஷ் கனகராஜ். சிறையில் இருந்து வெளியே வந்த ஹீரோ ஒரு பக்கம், பறிமுதல் செய்த போதை பொருளை பாதுகாக்கும் போலீசார் ஒரு பக்கம், அந்த போதை பொருளை கைப்பற்ற துடிக்கும் ரவுடி கும்பல் இன்னொரு பக்கம் என பல்வேறு கோணங்களில் கதாபாத்திரங்களை சுற்றவிட்டு, ரசிகர்களை இருக்கை நுனியில் படம் பார்க்க வைத்து வெற்றி கண்டார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து தளபதி விஜயுடன் அவர் இணைந்து பணியாற்றிய மாஸ்டர் திரைப்படமும் வணிக ரீதியாக பெரும் வெற்றியை பெற்றது. படத்திற்கு பக்க பலமாக இருந்த விஜய் சேதுபதி, தனது வில்லத்தனமான நடிப்பில் மிரட்டி இருந்தார். பல இடங்களில் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், தனது வில்லத்தனத்தின் மூலம் பெரிதாக பேசப்பட்டார்.

பின்னர் கமல்ஹாசன் உடன் சேர்ந்த லோகேஷ் கனகராஜ், விக்ரம் திரைப்படத்தை இயக்கி அதில் எல் சி யு என்னும் கான்செப்ட்டை கொண்டு வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தற்போது விஜய்யை வைத்து அவர் லியோ படத்தை இயக்கி வருகிறார். இதில் பல்வேறு நட்சத்திரங்களும் நடித்திருக்க, மன்சூர் அலிகானும் முக்கிய இடத்தில் இருக்கிறார். தன்னை மன்சூர் அலிகானின் தீவிர ரசிகன் என அடிக்கடி கூறும் லோகேஷ் கனகராஜ், கைதி படத்தையே முதலில் அவருக்குத்தான் எழுதியதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில், சமீபத்தில் தனியார் யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள மன்சூர் அலிகான், கைதி படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பற்றி பகிர்ந்துள்ளார். தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு என்னை தொடர்பு கொண்டு, மிகப்பெரிய படத்தில் முதன்மை கதாபாத்திரம் இருப்பதாக கூறினார். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த நேரத்தில் நான் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.

லோகேஷ் கனகராஜ் பெருந்தன்மையுடன் இருந்ததால்தான் கைதி திரைப்படத்தை எனக்காக எழுதியதாக கூறினார். பலர் இங்கு இது போன்ற வெளிப்படையான விஷயத்தை சொல்ல மாட்டார்கள். லியோ திரைப்படம் அடி தூள் கிளப்பும். ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருக்காங்க. தளபதி விஜய் அவர் செய்யக்கூடிய வேலைகளை நினைத்துக் கொண்டே இருப்பார். நான் ரெடி தான் பாடலுக்கு ஒரு ஷாட்டுக்கு பல டேக்குகள் எடுத்தாலுமே, தயக்கம் இன்றி அவர் ஆடுவார் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்