- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் 3 பாடல்களை பயன்படுத்த தடை விதித்த நீதிமன்றம் - இசைஞானி இளையராஜா நடவடிக்கையால்...

அந்த படத்தில் 3 பாடல்களை பயன்படுத்த தடை விதித்த நீதிமன்றம் – இசைஞானி இளையராஜா நடவடிக்கையால் அப்செட் ஆன ரசிகர்கள்!

- Advertisement -

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பழைய படங்களில் வந்த ஹிட் பாடல்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. தங்களது படங்களில் ஹைப் ஏற்றுவதற்காக சில இயக்குனர்கள் இந்த விஷயத்தை செய்கின்றனர். சில வாரங்களுக்கு முன்பு நடிகை வனிதா விஜயகுமார் இயக்கத்தில் வெளியான மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்திலும் இளையராஜா பாடலை பயன்படுத்தியது பெரிய விவகாரமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர் அஜீத்குமார். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த குட்பேட் அக்லி படம் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார்.

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடித்த வரலாறு தீனா அமர்க்களம் சிட்டிசன் வாலி உள்ளிட்ட படங்களின் ரெஃபரன்ஸ் காட்சிகளை கொண்டு உருவான இந்த படம் பெரிய அளவில் அஜீத்குமார் ரசிகர்களை கொண்டாட வைத்தது. 230 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இந்த படத்தில் நிறைய பழைய பாடல்களும் இருந்தன. அஜீத்குமார் நடித்த படங்களின் பாடல்கள் மட்டுமின்றி இன்னும் இளையராஜா இசையமைத்த சில ஹிட் பாடல்களும் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இதையடுத்து இசைஞானி இளையராஜா குட்பேட் அக்லி படக்குழுவினர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னுடைய அனுமதியின்றி குட் பேட் அக்லி படத்தில் தன்னுடைய பாடல்களை பயன்படுத்தி உள்ளனர் என்று அவர் மனுவில் தெரிவித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய இசையில் உருவான பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவோர் மீது இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்து வருகிறார்.

- Advertisement -

அதன் தொடர்ச்சியாக நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படத்தின் மீதும் அவர் வழக்கு தொடர்ந்தது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் முக்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது. இந்த வழக்கில் 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம் குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற இளமை இதோ இதோ, ஒத்த ரூபாய் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி ஆகிய 3 பாடல்களையும் பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது. இளையராஜா தொடர்ந்த வழக்கில் அஜீத்குமார் படத்தில் இடம்பெற்ற 3 பாடல்களுக்கு கோர்ட் தடை விதித்திருப்பது தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்