- Advertisement -
Homeபொழுதுபோக்குசொன்னதை சொன்னபடி செஞ்சுட்டாரே மன்சூர் அலிகான், இந்த விவகாரம் இப்போதைக்கு ஓயாது போலிருக்கே? - பாவம்...

சொன்னதை சொன்னபடி செஞ்சுட்டாரே மன்சூர் அலிகான், இந்த விவகாரம் இப்போதைக்கு ஓயாது போலிருக்கே? – பாவம் அந்த ஸ்டார் நடிகருக்கும் இதுல புது தலைவலி

- Advertisement -

நடிகர் மன்சூர் அலிகான், கேப்டன் பிரபாகரன் படம் மூலம் வீரபத்ரன் கேரக்டரில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருக்கும் அவர் 360க்கும் மேற்பட்ட படங்களில் பல கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

தனது படங்களில் நடிப்பது மட்டுமின்றி சில படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார் மன்சூர் அலிகான். மதுபானம் ஒழிப்பு பிரசாரத்தை மையமாக வைத்து, விரைவில் அவரது தயாரிப்பில் சரக்கு என்ற படம் வெளிவர இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில், லியோ படத்தில் மன்சூர் அலிகான் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். அதில் திரிஷா உடன் நடிப்பது குறித்து ஒரு சர்ச்சையாக கருத்தை சொன்னதால், அது விஸ்வரூபமானது. அதற்கு திரிஷா கண்டனம் தெரிவித்து பதிவு போட அது மேலும் வைரலானது.

இந்த பிரச்னையில் திரிஷாவுக்கு ஆதரவாக பலரும் தங்களது கண்டனத்தை, ஆட்சேபத்தை தெரிவித்தனர். இதில் நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்து, பரிந்துரை செய்து அனைத்து மகளிர் போலீசில் 2 பிரிவுகளில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யும் அளவுக்கு சென்றுவிட்டது. நடிகர் சிரஞ்சீவியும் இதில் கடுமையாக கண்டனம் தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

இதில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதாக கூறப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏற்கனவே இந்த பிரச்னையில் மன்சூர் அலிகான் நடிகர் சிரஞ்சீவி, நடிகைகள் குஷ்பு, திரிஷா ஆகியோர் மீது மான நஷ்டஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமை ( 11ம் தேதி) நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. இதில் திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி என மூன்று பேர் மீதும் தலா ரூ. ஒரு கோடி வீதம் ரூ. 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு மன்சூர் அலிகான் வழக்கு தொடர்ந்துள்ளது, தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்