- Advertisement -
Homeபொழுதுபோக்குசெய்தியாளர்களை தாக்கிய பிரபல தெலுங்கு நடிகர் மருத்துவமனையில் அட்மிட் - ரஜினியின் நெருங்கிய நண்பர் இப்படி...

செய்தியாளர்களை தாக்கிய பிரபல தெலுங்கு நடிகர் மருத்துவமனையில் அட்மிட் – ரஜினியின் நெருங்கிய நண்பர் இப்படி செய்யலாமா?

- Advertisement -

தெலுங்கு சினிமா நடிகர்களில் பிரபலமாக இருப்பவர் நடிகர் மோகன் பாபு. இவர் தெலுங்கு சினிமா துறையின் மூத்த நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிலும் சில படங்களில் 1980களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்துக்கு இவர் மிகவும் நெருங்கிய நண்பர் என்பது கவனிக்கத்தக்கது. தெலங்கானா சென்றால், நடிகர் ரஜினிகாந்த் இவருடன்தான் இருப்பார்.

நடிகர் மோகன் பாபுவுக்கு விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்ற 2 மகன்கள் உள்ளனர். லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளார். கடந்த சில நாட்களாக நடிகர் மோகன் பாபுவுக்கு அவரது மகன் மனோஜ் மஞ்சுவுக்கும் இடையே சொத்து பிரச்சனை தகராறு இருந்து வருவதாக தெரிய வருகிறது. இதுகுறித்து இருவரும் போலீசில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர்.

- Advertisement -

இந்த சூழலில் நேற்று மனோஜ் மஞ்சு, நடிகர் மோகன் பாபு வீட்டுக்குள் சில ஆட்களுடன் நுழைய முற்பட்டதாக தெரியவருகிறது. ஆனால் மோகன் பாபு வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த தனிப்படை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே நுழைய விடாமல் வெளியேற்றியதாகவும் தகவல் வெளியானது.

அப்போது ஆவேசமாக அங்கு வந்த நடிகர் மோகன் பாபு, வீட்டின் முன்பு நின்றிருந்த செய்தியாளர்களை திடீரென தாக்கினார். அங்கிருந்த செய்தியாளரின் மைக்கை பிடுங்கி சிலசெய்தியாளர்களை அடித்தார். இதில் காயமடைந்த 2 செய்தியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். செய்தியாளர்களை மோகன்பாபு மைக்கால் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதுகுறித்து தெலங்கானா பத்திரிகையாளர்கள் சங்கம் போலீசில் புகார் அளித்துள்ளது. இதையடுத்து நடிகர் மோகன் பாபு மீது தெலங்கானா போலீசார் 118 விஎன்எஸ் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே தற்போது உயர் ரத்த அழுத்தம் காரணமாக மோகன் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தெலங்கானா பத்திரிகையாளர் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் மோகன் பாபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளதால், போலீசார் தன்னை கைது செய்ய வர வாய்ப்புள்ளதால், அதை தவிர்க்கும் பொருட்டே மோகன் பாபு திடீரென மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் மோகன் பாபு இப்படி நடந்து கொள்ளலாமா என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்