நடிகர் தனுஷ் படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஒண்டர்ஃபார் பிலிம்ஸ் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். பல படங்களில் சொந்த குரலில் பாடல்களும் பாடி இருக்கிறார். மேலும் திரைப்பட இயக்குனராகவும் மாறி ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை என 4 படங்களை அவரே டைரக்ட் செய்து 3 படங்களில் அதில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்நிலையில் அசுரன் ராயன் படங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் நடித்த சமீபத்தி படங்கள் எதுவும் பெரிய வரவேற்பை வெற்றியை பெறவில்லை. குறிப்பாக குபேரா இட்லி கடை கர போன்ற படங்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தன. வசூலில் வணிக ரீதியாகவும் இந்த படங்கள் தனுஷூக்கு திருப்தியளிக்கவில்லை.
இதற்கிடையே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் தனது சகோதரி மகன் பவிஷ் என்பவரை இளம் கதாநாயகனாக அவர் அறிமுகப்படுத்தினார். அந்த படமும் சரியாக போகவில்லை. பிளாப் ஆனது. மேலும் சமீபத்தில் ராயன் கேப்டன் மில்லர் படங்களுக்கு தேசிய விருது அறிவித்த போதும் நடிகர் தனுஷ் கடுமையான விமர்சனங்களில் சிக்கினார்.
தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படங்களும் தோல்வியடைந்து வருகிறது. மேலும் தேவையற்ற விமர்சனங்களிலும் அவர் சிக்கி வருகிறார். இதற்கிடையே நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகிறார் என்ற தகவலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவரது பிறந்த நாள் விழாவில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்ட நிலையில் வரும் 2031ல் அவரும் தேர்தல் களத்தில் இறங்க வாய்ப்புள்ளது.
இந்த சூழலில் நடிகர் தனுஷ் மீண்டும் ஆக்சன் மசாலா படங்களுக்கு திரும்ப முடிவு செய்திருக்கிறார். குறிப்பாக அவர் நடித்த ஆக்சன் படங்களில் மாரி மற்றும் மாரி 2 படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களாகும். அதனால் அதே வரிசையில் மாரி 3 படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் முடிவு செய்திருக்கிறார்.
மாரி மாரி 2 படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகனை அழைத்து பேசிய நடிகர் தனுஷ், மீண்டும் பழைய பார்மூலாவில் ஆக்சன் மசாலா கலந்த ஒரு கதைக்களத்தில் மாரி 3 படத்தின் கதையை ஸ்கிரிப்ட் ஆக எழுதும்படி கூறியிருக்கிறார். மேலும் கதைக்கான ஒரு லைன் ஸ்டோரி சொல்லி அதையே டெவலப் செய்து எழுதுங்க என்றும் கூறியிருக்கிறார். மாரி 3 படத்தில் மீண்டும் பழைய அதகளமான கேரக்டரில் தனுஷை பார்க்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.





