- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யா நடிக்கும் 50வது படம், டைரக்டர் ஷங்கரா? அல்லது லோகேஷ் கனகராஜா? - கதை...

நடிகர் சூர்யா நடிக்கும் 50வது படம், டைரக்டர் ஷங்கரா? அல்லது லோகேஷ் கனகராஜா? – கதை எழுதப் போவது யார்? லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சூர்யாவுக்கு அடுத்தடுத்து 2 சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி அவருக்கு கம்பேக் தந்திருக்கிறது. மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூர்யா 47 படமும் பெரிய வெற்றியை தந்தால் ஹாட்ரிக் வெற்றி பெற்ற ஹீரோவாக சூர்யா சாதனை செய்துவிடுவார்.

இதற்கிடையே தனது 50வது படத்தை மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக தர சூர்யா திட்டமிட்டுள்ளார். அவரது 25வது படம் சிங்கம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதே போல் தனது 50வது படமும் பெரிய திருப்புமுனை வெற்றியை தந்த படமாக இருக்க வேண்டும் என்று நடிகர் சூர்யா விரும்புகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குனர் ஷங்கர் டைரக்ட் செய்ய உள்ளதாக ஒரு தகவல் பரவியது. இதில் படத்தின் கதை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் என்றும் திரைக்கதை இயக்கம் இயக்குனர் ஷங்கர் என்றும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்பட்டது.

ஏற்கனவே ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கஜினி மற்றும் ஏழாம் அறிவு போன்ற படங்களில் சூர்யா நடித்திருக்கிறார். இந்த 2 படங்களுமே மாஸ் ஹிட் படங்களாக இருந்தன. ஆனால் ஷங்கர் இயக்கத்தில் இதுவரை சூர்யா நடித்தது இல்லை. அதனால் இந்த படத்தில் ஷங்கர் இயக்கத்தில் அவர் நடிக்கலாம் என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் இப்போது லேட்டஸ்ட் தகவலாக லோகேஷ் கனகராஜ் தான் சூர்யாவின் 50வது படத்தை டைரக்ட் செய்யப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. அதுவும் ரோலக்ஸ் கதையை தான் அவர் எடுக்கிறார் என்றும் தெரிய வருகிறது. அல்லு அர்ஜூன் படத்தை டைரக்ட் செய்ய உள்ள லோகேஷ், அந்த படத்தை முடித்து விட்டு சூர்யா 50 படத்தை டைரக்ட் செய்கிறார் என்றும் கூறுகின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள பிரமாண்ட படமான வேள்பாரி படத்தில் சூர்யா நடிப்பதாக ஒரு தகவல் உள்ள நிலையில் சூர்யா 50 படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்ய வாய்ப்புள்ளது. அது கைதி 2 படமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. கார்த்தி தன் அண்ணன் சூர்யாவுக்காக கைதி 2 படத்தில் தனது கேரக்டரை விட்டுத் தர தயங்க மாட்டார் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்