தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் நட்சத்திர நடிகராக பல வெள்ளிவிழா படங்களை தந்தவர் நடிகர் மோகன். அவர் நடித்த உதயகீதம் இதயகோவில் மெல்ல திறந்தது கதவு பயணங்கள் முடிவதில்லை உயிரே உனக்காக என பல படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருந்திருக்கின்றன.
அவர் நடித்த பெரும்பாலான படங்களில் மோகன் மைக் பிடித்து பாடும் பாடகராக நடித்ததால் அவரை ரசிகர்கள் மைக் மோகன் என்று அழைத்தனர். பிறகு அவரை கோலிவுட்டிலும் மைக் மோகன் என்றே அழைக்கப்பட்டார். இவரை பற்றிய ஒரு முக்கியமான சுவாரசியம் என்னவென்றால் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மோகனுக்கு தமிழ் மொழியில் பேச தெரியாது.
அதனால் நடிகர் மோகன் நடித்த படங்களில் அவருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் பாடகர் எஸ்என் சுரேந்தர் தான். இவர் நடிகர் விஜயின் தாய்மாமா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எஸ்என் சுரேந்தர் பேசுவதை ஏதேச்சையாக கேட்டால், என்ன இது நடிகர் மோகன் குரல் போல இது இருக்கிறதே என ஆச்சரியப்படும் அளவுக்கு மைக் மோகனுக்கு அந்த குரல் செட்டாகி விட்டது.
நடிகர் மோகன் நடித்த படங்கள் எல்லாமே வெள்ளி விழா படங்களாக வெற்றி பெற்ற அந்த காலகட்டத்தில் நடிகர் கமல்ஹாசனை போல நடிகர் மோகனுக்கும் பெண் ரசிகைகள் மிகவும் ஏராளமாக இருந்தனர். அன்றைய இளம் பெண்களின் ட்ரீம் பாய் நடிகர் மோகன்தான். அதனால் மனதார அவரை நேசித்த பெண்கள் நிறைய பேர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் மைக் மோகன் தனது ரசிகை ஒருவர் பற்றி மனம் திறந்து கூறியதாவது, சில ஆண்டுகளுக்கு முன்பு ரசிகை ஒருவரை நான் நேரில் சந்தித்தேன். அப்போது சட்டென்று அவங்க தாலியை எடுத்து என்னிடம் காமிச்சாங்க. அவங்க தாலி லாக்கெட்டில் என் புகைப்படம் இருந்தது. இதை பார்த்து நான் ஷாக் ஆயிட்டேன்.
கிட்டத்தட்ட 30 வருஷமா என்னை பிடிக்கும் என்று அவங்க தாலியில் என்னோட புகைப்படத்தை வெச்சிருக்காங்க அந்த அம்மா. உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் இதை ஏத்துக்கிட்டதுக்கு அந்த அம்மாவின் கணவரின் காலை நான் தொட்டு கும்பிட வேண்டும் என்று நடிகர் மோகன் அந்த நேர்காணலின் போது நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





