- Advertisement -
Homeபொழுதுபோக்குமத்திய அரசின் தாதே சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட மலையாள நடிகர் மோகன்லால் - என்ன...

மத்திய அரசின் தாதே சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட மலையாள நடிகர் மோகன்லால் – என்ன சொல்லி இருக்கிறாருன்னு பாருங்க…!

- Advertisement -

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் மோகன்லாலுக்கு மத்திய அரசு தாதே சாகிப் பால்கே விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விருது அறிவிக்கப்பட்ட நடிகர் மோகன்லாலுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மலையாள சினிமாவில் சக நடிகராக உள்ள மம்முட்டி உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மலையாள சினிமாவில் மட்டுமின்றி தமிழிலும் பல படங்களில் நடிகர் மோகன்லால் நடித்திருக்கிறார். குறிப்பாக கமலுடன் உன்னைப் போல் ஒருவன் விஜயுடன் ஜில்லா மற்றும் பிரபுவுடன் சிறைச்சாலை மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இருவர் உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

- Advertisement -

தனக்கு தாதே சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது குறித்து நடிகர் மோகன்லால் கூறியிருப்பதாவது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாதே சாகிப் பால்கே விருது மலையாள திரை உலகிற்கு வருகிறது. எனவே இந்த விருதை மலையாள திரைத்துறையுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.

மலையாள திரைத்துறையில் என்னுடன் பணிபுரியும் அனைத்து சிறந்த கலைஞர்களுடனும் இதை பகிர்ந்து கொள்கிறேன். என்னை வடிவமைத்தவர் என்னுள் இருக்கும் கலைஞரை கொண்டு வந்தவர் இந்த துறையில் எனது அழகான ஒளியை காட்டியவர் நான் அவர்களுடன் எனது அன்பையும் மரியாதையையும் பகிர்ந்து கொள்கிறேன்.

- Advertisement -

நான் இந்த விருதை பெறுகிறேன் என்று கேள்விப்பட்டபோது அது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணம். மிகுந்த பெருமை பணிவு நன்றி உணர்வு அன்பு மற்றும் மரியாதையுடன் இந்த சிறந்த விருதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இது என் வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று என்று நினைக்கிறேன். இதை பெற்றதை கேட்டதும் என்ன நடக்கிறது இது உண்மையா என்று நினைத்தேன்.

இந்திய திரைப்படத்துறையில் ஒரு நடிகருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இது. எனவே இது ஒரு சிறந்த தருணம். ஆனால் இந்த சகோதரத்துவத்தில் உள்ள எனது சக உறுப்பினர்கள் அனைவருடனும் நான் இந்த பாராட்டை பகிர்ந்து கொள்கிறேன். அனைத்து கலைஞர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் படப்பிடிப்பு தளங்களில் என்னுடன் பணி புரியும் என்னை நேசிக்கும் என் ரசிகர்களுடன் நான் என் மரியாதையை பகிர்ந்து கொள்கிறேன் என்று நடிகர் மோகன்லால் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்