- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 69 படத்தின் கதையில் அதிரடி மாற்றங்களை செய்த இயக்குனர் எச். வினோத், கமல் உருவாக்கிய...

தளபதி 69 படத்தின் கதையில் அதிரடி மாற்றங்களை செய்த இயக்குனர் எச். வினோத், கமல் உருவாக்கிய கதையில் நடிக்க மறுத்தாரா நடிகர் விஜய்? – அட இப்படி எல்லாம் நடக்குதா?

- Advertisement -

வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். தளபதி 69 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய் நடிகைகள் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி, வில்லன் நடிகராக பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் பையனூரில் கடந்த 5ம் தேதி துவங்கியது. விஜய் நடிப்பில் முதல் பாடல் காட்சி நிறைவடைந்த நிலையில், வருகிற 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதை முடித்துவிட்டு, தீபாவளி பண்டிகைக்கு பிறகு நடிகர் விஜய் மீண்டும் தளபதி 69 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். அதுவரை மற்ற காட்சிகளின் படப்பிடி்பபை எச் வினோத் திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் கமல்ஹாசனுக்காக எழுதப்பட்ட கதையில்தான், எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக ஒரு தகவல் பதவி வந்தது. ஏனெனில் துணிவு படத்துக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கத் தான் எச் வினோத், ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் தங்கி இருந்து எச் வினோத் அந்தப் படத்தின் கதையை உருவாக்கினார்.

அப்போது நடிகர் கமல்ஹாசன் எச் வினோத்துடன் இணைந்து, இந்த கதையில் பல விஷயங்களை அவர் சேர்த்தார். பல புதிய விஷயங்களை அதில் கொண்டு வந்தார். குறிப்பாக இது அரசியல் கதை என்பதால் அரசியல் சார்ந்த பல விஷயங்களை இந்த படத்தில் கமல் கொண்டு வந்திருக்கிறார்.

- Advertisement -

ஆனால் இப்போது கமல் உருவாக்கிய கதையில் விஜய் நடிக்க மறுத்திருப்பதாக தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கோட்பாடுகளும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோட்பாடுகளும் வெவ்வேறாக இருப்பதால், கமல்ஹாசனின் உணர்வு சார்ந்த விஷயங்களை என்னுடைய படத்தில் கொண்டுவர வேண்டாம் என்று விஜய் கூறியதாகவும், அதனால் தளபதி 69 படத்தில் பல காட்சிகளில் மாற்றம் செய்து புதிய விஷயங்களை எச் வினோத் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் எந்த கட்சியும் சாராத புது விதமான ஒரு அரசியல் பாதையில் பயணிக்க திட்டமிட்டு இருக்கிறார். அதனால் தளபதி 69 படத்தில் சில முக்கிய விஷயங்களை அவர் அரசியல் சார்ந்த காட்சிகளை கொண்டுவர முடிவு செய்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த படம் விஜயின் கடைசி படமாக மட்டும் இல்லாமல், அவரது அரசியல் பயணத்துக்கு முக்கியத்துவம் தரும் ஒரு படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த படத்தில் கமல்ஹாசன் கதை இருக்காது. இது புதுவிதமான கதையாக இருக்கும். அதற்காக பல காட்சிகளில் திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்பட்டு இருப்பதாக தற்போது லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்